பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றத்தின் அதிரடி பின்னணி … கேட்டா ஷாக் ஆயிடுவீங்க !!

By Selvanayagam PFirst Published Mar 22, 2019, 10:07 PM IST
Highlights

பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முருகன் திடீரென மாற்றப்பட்டு, புதிய அதிமுக வேட்பாளராக எம்.மயில்வேல் அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தமிழக சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டிருந்தார்.  இந்நிலையில், அவருக்குப் பதிலாக, அதிமுக அதிகாரப்பூா்வ வேட்பாளராக தேனி-அல்லி நகர ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் எம்.மயில்வேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரியகுளம் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முருகன், அண்மையில் அங்கு நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற குற்றறச்சாட்டு எழுந்தது. மேலும், அவர் பிரசாரத்திலும் இதுவரை கலந்து கொள்ளவில்லை எனப் புகார் கூறப்பட்டதை அடுத்து  அவர் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இதன் உண்மைப் பின்னணி குறித்து அதிமுக வட்டாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் பரவி வருகின்றன.
அதாவது துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் பெரியகுளம் பகுதியில் நிலங்களை வாங்கி அதில் மண் சுரங்கங்கள் தோண்டி மண்ணெடுத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த  மண் சுரங்கங்களுக்கான நிலங்களை வாங்கிக் கொடுக்கும் தரகராக வேட்பாளர் முருகனின் தந்தை செயல்பட்டு வந்துள்ளார்.  மேலும் முருகனின் தந்தை  நிலம் கொடுக்காதவர்கள் மீது பிசிஆர் சட்டத்தின் கீழ் புகாரும் கொடுத்துள்ளாராம். பல பேரிடம், ‘பிசிஆர் புகார் கொடுத்துவிடுவேன்’ என்று மிரட்டியே நிலங்களை வளைத்து ஓபிஎஸ் தரப்பினருக்கு வாங்கிக் கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் பெரியகுளம்  தொகுதியில் முருகன் குடும்பத்தினருக்கு பெரிய அளவுக்கு கெட்ட பெயர் உள்ளது. இது குறித்து அறிந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக முருகனை மாற்றிவிட்டு மயில்வேல்  என்பவரை புதிய வேட்பாளராக அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலைப் பற்றிக்கூட கவலைப்படாத இபிஎஸ், எந்த விதத்திலும் சட்டமன்றத் தேர்லில் தோற்றுவிடக் கூடாது என களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் தான் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

click me!