அரவிந்த் கெஜ்ரிவால் தான் இதுல நம்பர் 1…!

By Selvanayagam PFirst Published Mar 22, 2019, 8:46 PM IST
Highlights

அரசியலிலும், சமூக வலைதளங்களிலும் துடிப்புடன் செயல்படும் முதலமைச்சர்களில்  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலிடத்தில் உள்ளதாக டுவிட்டர் செய்து வெளியிட்டுள்ளது.

அரசியலிலும், சமூக வலைதளங்களிலும் துடிப்புடன் செயல்படும் 6  முதலமைச்சர்கள்  மற்றும் அவர்களை பின்தொடர்வோர் பற்றிய விபரங்களை டுவிட்டர் வெளியிட்டுள்ளது. 

இதில், டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் முதல் இடத்திலும் (14.6 மில்லியன் பேர் பின்தொடர்வோர்), பீகார் முதலமைச்சர்  நிதிஷ்குமார் 2வது இடத்திலும் (4.77 மில்லியன் பேர்), ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு 3வது இடத்திலும் (4.19 மில்லியன் பேர்), உ.பி., முதமைச்சர்  யோகி ஆதித்யநாத் 4வது இடத்திலும் (3.61 மில்லியன் பேர்), மகாராஷ்டிர முதலமைச்சர்  தேவேந்திர பட்நாவீஸ் 5வது இடத்திலும் (3.42 மில்லியன் பேர்), மேற்குவங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி 6வது இடத்திலும் (3.23 மில்லியன் பேர்) உள்ளனர்.

முன்னதாக அதிக பிரபலமான முதலமைச்சர்களின்  பட்டியலில் மறைந்த கோவா முதலமைச்சர்  மனோகர் பரீக்கர் 2வது இடத்தில் இருந்து வந்தார். இவரை 6.9 மில்லியன் பேர் பின்தொடர்ந்துள்ளனர். 2019ம் ஆண்டை பொறுத்தவரை டெல்லியை சேர்ந்த மற்ற ஆம்ஆத்மி தலைவர்களின் டுவீட்களை ரீடுவீட் செய்வது, ஆம்ஆத்மி சாதனைகளை சொல்வது, மத்திய அரசை விமர்சிப்பது ஆகியவற்றிற்கு கெஜ்ரிவால் டுவிட்டரை பயன்படுத்தி வருகிறார்.


 
நிதிஷ்குமார் பெரும்பாலும் தனது பொதுகூட்டங்கள், அரசு விழாக்கள், விழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மக்களுக்கு வாழ்த்து கூறுவதற்கு டுவிட்டரை பயன்படுத்துகிறார்.

சந்திரபாபு நாயுடு, ஒருநாளைக்கு 25 டுவீட் வரை பதிவிட்டுள்ளார். மிக அரிதாக முதலமைச்சர்  அலுவலக மற்றும் மாவட்ட அதிகாரிகளின் பதிவுகளை ரீடுவீட் செய்துள்ளார். 

யோகி ஆதித்யநாத், பொது கூட்டங்கள், தனது பேச்சுக்களை மட்டுமே டுவீட் செய்துள்ளார். தேவேந்திர பட்நாவிஸ், மகாராஷ்டிர பா.ஜ., கூட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்வது, அரசு திட்டங்கள், பொதுக்கூட்ட படங்களை பதிவிடுவதற்கு டுவிட்டரை பயன்படுத்தி வருகிறார். 

மம்தா பானர்ஜி, பண்டிகைகளுக்கு மக்களுக்கு வாழ்த்து சொல்வது, தலைவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வது, பிரபலங்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது ஆகியவற்றிற்காக டுவிட்டரை பயன்படுத்தி வருகிறார்.

click me!