பேரறிவாளன் தந்தை மருத்துவமனையில் அனுமதி..! அவருக்கு ஆப்ரேசன்..!

Published : Oct 13, 2020, 08:29 AM ISTUpdated : Oct 13, 2020, 08:54 AM IST
பேரறிவாளன்  தந்தை மருத்துவமனையில் அனுமதி..! அவருக்கு ஆப்ரேசன்..!

சுருக்கம்

 பேரறிவாளனின் தந்தை அவரது வீட்டில் திடீரென வழுக்கி விழுந்ததில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

பேரறிவாளனின் தந்தை அவரது வீட்டில் திடீரென வழுக்கி விழுந்ததில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் ஏற்கனவே இரண்டு முறை பரோலில் வந்திருந்தார். இந்த நிலையில் 3ஆவது முறையாக பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் கேட்டு,30 நாள்கள் பரோல் விடுப்பு வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம்உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து அவர் தனது மருத்துவ சிகிச்சைக்காக நீதிமன்ற ஆணையின் பேரில் ஜோலார்ப்பேட்டை வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில், பேரறிவாளனின் தந்தை ஞானசேகரன் என்ற குயில்தாசன் அவரது வீட்டில் திடீரென வழுக்கி விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில பல்வேறு எலும்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்ற பேரறிவாளன் தனது தந்தையை மேல்சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவமனையில் பேரறிவாளனின் சகோதரி அன்புமணி உதவியுடன் அவரது தந்தை கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நாளை அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய்யை சீண்டாதீங்க.. பாஜகவினருக்கு டெல்லி கொடுத்த 'சைலண்ட்' வார்னிங்.. மாஸ்டர் பிளான்!
‘டோ ஷூட் நடத்தும் முதல்வரை வீட்டுக்கு அனுப்புவோம்…’ எம்.ஜி.ஆர் சமாதியில் இபிஎஸ் சபதம்