தலித்துனா தரையிலதான் உட்காரனுமா.? அரசு அதிகாரம் கிடைத்தும் தரையில் அமர்ந்த பஞ்சாயத்து தலைவி.!

By T BalamurukanFirst Published Oct 12, 2020, 10:06 PM IST
Highlights

பஞ்சாயத்து தலைவி பட்டியல் இனத்தவர் என்பதற்காக தரையில் அமரவைத்த சம்பவம் தமிழகம் அரசிற்கு அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


பஞ்சாயத்து தலைவி பட்டியல் இனத்தவர் என்பதற்காக தரையில் அமரவைத்த சம்பவம் தமிழகம் அரசிற்கு அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

கடலூர் மாவட்டம்.சிதம்பரம் அருகேயுள்ள புவனகிரியை அடுத்துள்ள தெற்குத்திட்டை ஊராட்சித் தலைவி ராஜேஸ்வரி.இவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். இதன் காரணமாக ஊராட்சி மன்றக் கூட்டத்தில் அவருக்கு நாற்காலியில் உட்கார அனுமதி அளிக்கப்படவில்லை. தலைவியாக இருந்தாலும் தரையிலேயே உட்கார வைக்கப்பட்டார். துணைத் தலைவரான மோகன்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் நாற்காலிகளில் அமர்ந்து கூட்டங்களில் பங்கேற்று வந்தனர். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் ராஜேஸ்வரியை கொடியேற்றவும் அனுமதிக்கவில்லை.இது பற்றிய செய்தி அண்மையில் வெளியாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.

வழக்கம்போல திமுக தலைவர் ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டார். ‘’இது தமிழ் மண்ணுக்கு நேர்ந்திருக்கும் அவமானம். ஆட்சி அதிகாரத்தில் பட்டியலினத்தவரும் பங்கேற்று மக்கள் பணியாற்றிட வேண்டும் என்பதில் திமுக உறுதியுடன் இருக்கிறது’’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஊராட்சித் தலைவி ராஜேஸ்வரி அதிமுகவை சேர்ந்தவர். ஆதிக்க மனப்பான்மையுடன் அவரை தரையில் உட்கார வைத்த துணைத் தலைவர் மோகன்ராஜ் திமுகவை சேர்ந்தவர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மூலம் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, ஊராட்சி செயலாளரை கைது செய்திருப்பதுடன் தலைமறைவாக இருக்கும் மோகன்ராஜையும் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.


 

click me!