ஸ்டாலின் மட்டும் சீட் கொடுக்காம போகட்டும்...! தி.மு.க.வை மிரள வைக்கும் கூட்டணி கட்சி..!

By vinoth kumarFirst Published Jan 13, 2019, 5:44 PM IST
Highlights

 20 தொகுதி இடைத்தேர்தலில் பெரும்பான்மை தொகுதியை திமுக கைப்பற்றினால்தான் எடப்பாடி அரசை அகற்ற முடியும். அந்த அடிப்படையில் வெற்றி வாய்ப்புள்ள பெரம்பூர் தொகுதியில்  திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும். தலைமையும் அந்த முடிவில்தான் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

பெரம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த வெற்றிவேல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அந்தத் தொகுதி காலியாக உள்ளது. இந்தத் தொகுதியோடு சேர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலியாக உள்ள தொகுதிகளில் சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸும்  பெரம்பூர் தொகுதியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியும் போட்டியிட்டது.

இந்த இரு தொகுதிகளிலும் அதே கட்சிகள் மீண்டும் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. சோளிங்கர் தொகுதியை மீண்டும் கேட்க உத்தேசித்துள்ளது காங்கிரஸ். இதேபோல கடந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் இந்த முறையும் போட்டியிட ஆர்வமாக உள்ளார். கடந்த தேர்தலில் அவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றதால், இந்த முறை அவருக்கே பெரம்பூர் தொகுதியைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் தனபாலன் இருக்கிறார்.

ஆனால், இந்த முறை திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை நிறுத்த திமுக விரும்புவதாக பெரம்பூர் தொகுதியில் திமுகவினர் பேசி வருகிறார்கள். இதுபற்றி அந்தத் தொகுதியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “2011, 2016 என இருமுறை தனபாலன் இங்கே நின்றார். இரு முறையும் திமுக தோல்வியடைந்தது. 2016-ல் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், சொற்ப ஓட்டுகளில் தனபாலன்  தோல்வியடைந்தார். இரண்டுமுறை அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் அவர் தோல்வியடைந்தார். 

இப்போதும் அவர் திமுக கூட்டணியில் இருந்தாலும், இந்த முறை திமுகவே போட்டியிட வேண்டும் என்று எங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளோம். 20 தொகுதி இடைத்தேர்தலில் பெரும்பான்மை தொகுதியை திமுக கைப்பற்றினால்தான் எடப்பாடி அரசை அகற்ற முடியும். அந்த அடிப்படையில் வெற்றி வாய்ப்புள்ள பெரம்பூர் தொகுதியில்  திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும். தலைமையும் அந்த முடிவில்தான் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

click me!