இரட்டை தலைமையில் என்ன பிரச்சனை இருந்தது என்பதை ஒற்றை தலைமையை ஏற்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதிமுக தொண்டர் ஒருவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஓ.பி.எஸ். பெற்றுக் கொடுத்த காரணத்தால், ஒற்றைத் தலைமை கோஷத்தை எழுப்புவதாக எடப்பாடி தரப்பு மீது பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமசந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.
அதிமுக தொண்டர் ஒருவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஓ.பி.எஸ். பெற்றுக் கொடுத்த காரணத்தால், ஒற்றைத் தலைமை கோஷத்தை எழுப்புவதாக எடப்பாடி தரப்பு மீது அதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமசந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.
எஃகு கோட்டை என்று வர்ணியிக்கப்பட்ட அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பிரளயம் வெடித்துள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கழக உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட பிறகே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமையை முழு மனதோடு தேர்வு செய்யப்பட்டனர். தனது சுயலாபத்திற்காக, பதவி ஆசைக்காக ஒற்றை தலைமை என்று மாற்றி பேசுவது நியாயமா என கேள்வி எழுப்பினார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வித்திட்ட தலைமைப் பொறுப்பை பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்க கூடாது. கழக உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னதை மீறும் செயலாகவே பார்க்கிறேன். எங்கு பார்த்தாலும் கழகத்தின் பொதுச்செயலாளர் என்ற கோஷம் எழுகிறது. பொதுச் செயலாளர் என்ற பதவியை ஜெயலலிதா ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது. அதற்காகவே பொதுக்குழுவில் நிரந்தர பொதுச் செயலாளர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீங்களும் எண்ணிக்கை டிவியில் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அவர்களும் எண்ணிக்கை கம்மியாக இருப்பதால் கிண்டல் கேலி செய்து வருகின்றனர். அன்று தர்மயுத்தம் நடத்தியபோதும் ஓபிஎஸ் இடம் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தன. அவர் உங்கள் வீட்டைத் தேடிவந்து ஆதரவு தந்தார் என்பதை நான் நினைவுப்படுத்துகிறேன். எங்களை சந்தர்ப்பவாதி என்று கூறும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமியை பார்த்து கேட்கிறேன் சத்தியமாக சொல்லுங்கள் நீங்கள் உத்தமர்தானா சந்தர்ப்பவாதிகள் யார் என்று தமிழக மக்களுக்கு தெரியாதா? தர்மயுத்தம் நடத்தியபோது நீ எங்கே இருந்தீர்கள். இப்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று எண்ணி பார்க்க வேண்டும்.
மேலும், இரட்டை தலைமையில் என்ன பிரச்சனை இருந்தது என்பதை ஒற்றை தலைமையை ஏற்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதிமுக தொண்டர் ஒருவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஓ.பி.எஸ். பெற்றுக் கொடுத்த காரணத்தால், ஒற்றைத் தலைமை கோஷத்தை எழுப்புவதாக எடப்பாடி தரப்பு மீது பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமசந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.