பொதுக்குழுவுக்கு வாருங்கள்.. பேசி தீர்த்துக் கொள்ளலாம்.. OPS-க்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2022, 1:09 PM IST
Highlights

நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ள வேண்டுமென எடப்பாடிபழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்

நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டுமென எடப்பாடிபழனிசாமி  ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ள வேண்டுமென எடப்பாடிபழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பொதுக்குழுவில் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. ஆனால் இரட்டை தலைமையே நீடிக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மாறி மாறி இரண்டு  தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கட்சிநில் 80% மாவட்ட செய்லாளர்கள், மற்றும் மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆனால் கட்சியை ஓபிஎஸ்சிடம்  தாரைவார்த்துவிடக்கூடாது என்ற முடிவுல் உள்ள  ஓ.பன்னீர் செல்வம், இந்த பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறார். இதை வலியுறுத்தி எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். ஆனால் பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி ஓ. பன்னீர் செல்வத்திற்கு பொதுக்குழு தொடர்பாக பதில் கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் நாம் இருவரும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டும்.  இருவரும் முடிவு செய்தே அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறுவதை ஏற்க முடியாது, ஆகவே நாம் அறிவித்தபடி பொதுக்குழு நடைபெற வேண்டும். பொதுக்குழு நடத்துவதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான சூழல் இல்லை, எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாளை பொதுக்குழுவில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.

நிச்சயம் பொதுக்குழுவை நடத்த வேண்டும் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர். என நாளை நடைபெறும் பொதுக் குழுவில் நீங்கள் கலந்து கொள்ள வாருங்கள் என் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அந்த கடிதத்தில் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் கூட்டத்தில் கலந்து கொள்வாரா.? அல்லது புறக்கணிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 

click me!