மக்களே வரும் 9 ஆம் தேதி நடக்கப்போகுது பயங்கரம்.. தமிழகத்துக்கு விடப்பட்ட எச்சரிக்கை.. பிச்சு உதறுமாம்.

By Ezhilarasan BabuFirst Published Nov 6, 2021, 11:08 AM IST
Highlights

அதன் முக்கிய குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகிற நவம்பர் 9 ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக வரும் 9ஆம் தேதி மழையின் அளவு மிகக் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை கடந்த 25ஆம் தேதி அதிரடியாக தொடங்கியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக இடி மின்னலுடன் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும்  வெள்ள நிவாரண முன்னெச்சரிக்கை பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அன்றாடம் இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை நிலவரத்தை கணித்து மக்களுக்கு வழங்கி வருகிறது.அந்த வகையில்

அடுத்த நான்கு தினங்களுக்கு மழையின் அளவு தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இதுகுறித்து  5-11-2021, அன்று வெளியான வானிலை அறிக்கையில், 06.11.2021: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். என்றும், 07.11.2021: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 08.11.2021,: தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும், 09.11.2021தென்மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அதன் முக்கிய குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகிற நவம்பர் 9 ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுபெறக்கூடும். அதை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு வடமேற்கு திசையிலிருந்து மேற்கிந்திய கடலோரப் பகுதிகளில் இருந்து நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்றும், அடுத்த நான்கு நாட்களுக்கு கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மற்றும் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் யானம் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 9ஆம் தேதி தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

click me!