அடித்து நொறுக்கப்பட்ட பாஜக எம்.பி.,யின் கார்... கோயிலில் சிறைபிடிக்கப்பட்ட தலைவர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Nov 6, 2021, 10:37 AM IST
Highlights

ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் வன்முறையாக மாறியது. ஹிசார் மாவட்டத்தில் பாஜக ராஜ்யசபா எம்.பி., ராம் சந்தர் ஜங்ராவின் கார் தாக்கப்பட்டது.

"வேலையில்லா குடிகாரர்கள்" என்று கூறியதையடுத்து, பாஜக எம்.பி., ராம் ஜங்ராவுக்கு எதிராக நர்நாவுண்டில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், போலீசார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதை அடுத்து, "தெருவில் விழுந்து" விவசாயி காயம் அடைந்ததாகக் கூறினர்.

பாஜக எம்.பி., ராம் சந்தர் ஜங்ராவின் கார் சேதமடைந்தது. ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் வன்முறையாக மாறியது. ஹிசார் மாவட்டத்தில் பாஜக ராஜ்யசபா எம்.பி., ராம் சந்தர் ஜங்ராவின் கார் தாக்கப்பட்டது. அதே நேரத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் போராட்டக்காரர்களால் சுமார் ஏழு மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டனர்.

முதல் சம்பவத்தில், தர்மசாலாவில் அடிக்கல் நாட்டுவதற்காக ஹிசாரின் நார்னவுண்ட் நகரத்திற்கு ஜங்ரா வருகை தந்தார். அவர் இருப்பதை அறிந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கு திரண்டு அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டக்காரர்களின் நடமாட்டத்தை தடுக்க போலீசார் தடுப்புகளை நிறுவினர். ஆனால் அவர்கள் முன்னேறி எம்பியின் காரை தாக்கி அதன் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.

அப்போது காரில் அமர்ந்திருந்த ஜாங்ரா, “தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக” கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காரை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

"பாஜக குண்டர்கள்" தங்களை தாக்கியதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் விளைவாக ஒரு போராட்டக்காரர் பலத்த காயம் அடைந்தார். விவசாயி குல்தீப் ராணா படுகாயமடைந்து ஹிசாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் விவசாய தலைவர் ரவி ஆசாத் தெரிவித்தார். ஜங்ரா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி, நார்னவுண்ட் காவல் நிலையத்தில் விவசாயிகள் சனிக்கிழமை பஞ்சாயத்து செய்தனர்.

நார்னாண்ட் டிஎஸ்பி ஜுகல் கிஷோர் ராம் இது குறித்து கூறுகையில், “போலீஸ் தடியடி எதுவும் நடத்தவில்லை. அவர் (ராணா) தெருவில் விழுந்ததில் காயம் அடைந்தார். எம்பி ஒருவரின் காரின் கண்ணாடியை உடைத்ததற்காக இரண்டு விவசாயிகளை நாங்கள் கைது செய்தோம். சிகிச்சை பெற்று வரும் விவசாயியின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்தார். தலையில் ஏற்பட்ட உள் காயம் காரணமாக விவசாயி சுயநினைவை இழந்துள்ளதாகவும் போலிஸார் தெரிவித்தனர்.

இரண்டாவது சம்பவத்தில், விவசாயிகள் பல பாஜக தலைவர்களை ரோஹ்தக்கின் கிலோய் கிராமத்தில் உள்ள கோவிலில் அடைத்து வைத்தனர். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் புனித தலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றதை நேரலையில் காண பாஜக தலைவர்கள் கிராமத்தில் இருந்தனர்.

பாஜக தலைவர்களின் வருகையை அறிந்த விவசாயிகள், கோவிலுக்கு வெளியே முகாமிட்டனர், மூன்று விவசாய சட்டங்களின் பிரச்சினையில் "சமூகப் புறக்கணிப்பு" செய்த போதிலும் கோவிலுக்குச் சென்றதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினர்.

மூத்த நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் கைவிட மறுத்தனர். இதுகுறித்து,’’கோவிலை சுற்றி முற்றுகையிட்டு, விவசாயிகள் தங்களது டிராக்டர் டிராலிகளை கோவிலுக்கு செல்லும் தெருக்களில் நிறுத்தி வைத்தனர். விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வரும் வரை கிராமத்திற்குள் நுழைய மாட்டோம் என்று பாஜக தலைவர்களிடம் இருந்து விவசாயிகள் உத்தரவாதம் பெற விரும்பினர்.

பிஜேபி தலைவர்கள் "மன்னிப்பு" தெரிவித்த பிறகு ஏழு மணி நேரத்திற்குப் பிறகு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். 
 

click me!