
நாமக்கல்லை அடுத்து ஆலம்பாளையத்தில் தமிழக அமைச்சர் தங்கமணியின் காரை, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை இட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பருவமழை சரிவர பெய்யாததாலும், கோடை வெயில் உக்கிரமாக இருந்துவருவதாலும் பெரும்பாலான மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கோபிசெட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் காரை பொதுமக்கள் குடிநீர் பிரச்சனைக்காக காலிக் குடங்களுடன் முற்றுகை இட்டனர்.
நேற்றும் கூட குடிநீர் பிரச்சனைக் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 8 நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்த ஆலம்பாளையத்தில் தமிழக அமைச்சர் தங்கமணியின் காரை பொதுமக்கள் காலிக் குடங்களுடன் முற்றுகை இட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.