மக்களே உங்கள் மாவட்டம் இதில் இருக்கிறதா என்று பார்க்கவும்... அடுத்த 24 மணி நேரத்தில் நிகழப்போகும் தாக்குதல்.

By Ezhilarasan BabuFirst Published Nov 13, 2020, 3:00 PM IST
Highlights

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:  அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி,  ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்ன வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கை  முதல் வடதமிழக கடற்பகுதி வரை நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதேபோல் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த இரு தினங்களுக்கு இடைவெளிவிட்டு மிதமான மழையும், அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும்என தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:  அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி,  ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. நவம்பர் 15ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

click me!