தமிழக மக்களே உஷார்... அடுத்த 24 மணி நேரத்தில், இடி மின்னலுடன் கூடிய மழை.. அடி பிச்சு உதறப்போகிறது.

By Ezhilarasan BabuFirst Published Dec 9, 2020, 1:30 PM IST
Highlights

வட கிழக்கு பருவ காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (9-12-2020) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 

வடகிழக்கு பருவ காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (9-12-2020) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அடுத்த 48 மணி நேரத்தில் (10-12-2020) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்சும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினம் (தூத்துக்குடி) 7 சென்டிமீட்டர் மழையும், பெரியனைக்கென்பளையம் (கோவை) கோத்தகிரி (நீலகிரி) வட்டணம், (ராமநாதபுரம்) குன்னூர் தலா 5 சென்டி மீட்டர் மழையும் திருச்செந்தூர், சோலையார் (கோவை) காரியாபட்டி (விருதுநகர்) சோழிங்கநல்லூர் (சென்னை) தலா 4 சென்டி மீட்டர் மழையும் கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) உதகமண்டலம் (தேக்கடி) தேனி, சூளகிரி (கிருஷ்ணகிரி) ஆத்தூர் (சேலம்) இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு) வாலாஜா (ராணிப்பேட்டை) காஞ்சிபுரம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்) தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

 

click me!