தமிழக மக்களே உஷார்... வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி.. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை..

By Ezhilarasan BabuFirst Published Dec 26, 2020, 1:01 PM IST
Highlights

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 28-12-2020 ஆம் தேதியில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் நாகப்பட்டினம் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என எச்சரித்துள்ளது. 

29-12-2020 மற்றும் 30-12-2020 ஆகிய தேதிகளில், தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என எச்சரித்துள்ளது. 

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்சும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸசையும் ஒட்டியிருக்கும் என எச்சரித்துள்ளது.
 

click me!