அடுத்த 25 ஆண்டுகளில் மக்கள் எம்ஜிஆரை சுத்தமாக மறந்து விடுவார்கள் ! அடித்துச் சொல்லும் ஆ.ராசா !!

By Selvanayagam PFirst Published Jul 13, 2019, 8:26 AM IST
Highlights

எம்.ஜி.ஆர் மீது இருந்த சினிமா மோகத்தால் மட்டுமே இன்னும்  அவர் மக்கள் நினைவில் இருக்கிறார் என்றும்  அவரது திட்டங்களால் அல்ல என்றும் தெரிவித்த ஆ.ராசா,  இன்னும் 25 ஆண்டுகளில் மக்கள் எம்.ஜி.ஆரை மறந்து விடுவார்கள் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற  நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு ஆ.ராசா. வெற்றி பெற்றார். இந்நிலையில் மறைந்த கருணாநிதியின் 96 ஆவது பிறந்த நாள் விழா  உதகையில் நடைபெற்றது.

அதில் பங்கேற்றுப் பேசிய ஆ.ராசா, இன்றைய இளம் வாக்காளர்கள் பலர் கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கும் , சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்த நிகழ்வை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. தமிழக அரசியல் வரலாறு அவர்களுக்கு தெரியவில்லை என குற்றம்சாட்டினார்..

தமிழகமெங்கும் பள்ளிகளைத் திறந்து, மாணவர்களுக்காக சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியவர் பேரறிஞர் அண்ணா. பெண்களுக்கான உரிமை வழங்கும் சட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. 

ஆனால்  எம்.ஜி.ஆர் மீது இருந்த சினிமா மோகத்தால் மட்டுமே இன்னும் மக்கள் நினைவில் இருக்கிறார். அவரது திட்டங்களால் அல்ல என ஆ.ராசா தெரிவித்தார். அடுத்த  25 ஆண்டுகளில் மக்கள் எம்.ஜி.ஆரை முற்றிலுமாக மறந்து போவார்கள் என கூறினார்.

பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்ற தலைவர்கள் செய்த வரலாற்றை இன்னும் எத்தனை தலைமுறை கடந்தாலும் அவர்கள் போற்றப்படுவார்கள். அதுவே உண்மையான சாதனை என்றும்  ஆ.ராசா பேசினார்.

click me!