ஆன்லைன் ரம்மியை திமுக மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறதோ என்ற சந்தேகம் உள்ளது... ஜெயக்குமார் சாடல்!!

By Narendran SFirst Published Mar 22, 2023, 5:26 PM IST
Highlights

ஆன்லைன் ரம்மியை திமுக மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு உள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஆன்லைன் ரம்மியை திமுக மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு உள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வேளான் பட்ஜெட்டில் விவசாயிகளின் மன குமுறலை எடப்பாடி வெளிபடுத்தியுள்ளார். வேளாண் பட்ஜெட் பொறுத்தவரையில், அரைத்த மாவையே அரைத்தது போல் உள்ளது. விவசாயம் வளர்ச்சி, விவசாயி வளர்சிக்கான புதிய திட்டம் இல்லை.தோட்ட கலை, காய்கறிகளுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்திய பின்னும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிச்சம். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கை கடந்த ஆண்டு கடந்த ஆண்டு என்ன கூறினார்கள். அதே தான் இந்த ஆண்டும் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் ரூ.55 உயர்வு..! விலைவாசி உயர வாய்ப்பு.? - டிடிவி தினகரன்

மக்களின் குறை தீர்க்கும் வகையில் பட்ஜெட் அமையவில்லை. குடும்ப தலைவிக்கு ஊக்கதொகை மே மாதம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஈரோடு தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தற்போது அறிவித்துள்ளனர். மேலும், அனைவருக்கும் ஊக்கத்தொகை என அறிவித்து அனைவரும் ஓட்டு போட்டு வெற்றி பெற்ற பின்னர், இன்று தகுதியான குடும்ப தலைவிக்கு தருவோம் என அதை குறுக்கி மோசடியில் ஈடுபடுகின்றனர். அண்ணா பெயரை எங்கும் உபயோகிக்காமல் தந்தை பெயரையே சூட்ட நினைக்கிறார். எவ்வளவு தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களுடைய பேரை ஏன் பெவிலியனுக்கு வைக்கவில்லை. கிரிக்கெட் மைதானம் திறக்க வேண்டும் என்றால் கூட தந்தை பெயரையே சூட்டுகிறார் முதலமைச்சர். ஒபிஎஸ்க்கும், அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி ஆணவப் படுகொலை..! குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை- தனிச்சட்டம் இயற்றிடுக- சீமான் ஆவேசம்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை மாறி எங்கும் கருணாநிதி, எதிலும் கருணாநிதி என்று நிலை ஆகிவிட்டது. ஆன்லைன் ரம்மியை திமுக மறைமுகமாக ஊக்கப்படுத்துவதாக தமிழக மக்களுக்கு சந்தேகம் உள்ளது. எனது பெயர் உள்ள கல்வெட்டுகளை உடைப்பதாக கேள்வி பட்டேன். கல்வெட்டில் உடைக்கலாம், மக்கள் மனதில் இருந்து என் பெயரை நீக்க முடியாது. இன்று நீங்கள் உடையுங்கள், எங்களுக்கு காலம் வரும் கல்வெட்டு கண்ணில்பட்டால் நாங்கள் பார்த்து கொள்கிறோம். உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்கள் திமுகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். போரில் பலியான ஈழத் தமிழர்களின் ஆவி திமுகவை சும்மா விடாது. கடந்த காலங்களில் மத்திய அரசு ஆட்சி கவிழும் போது தான், திமுக அரசு அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியது. அப்போது இவர்கள் ஏன் கட்ச தீவை மீட்க போராடவில்லை என்று தெரிவித்துள்ளார்.  

click me!