சென்னையில் ஆக்சிஜன் இல்லாமல் செத்து மடியும் மக்கள்... மருத்துவமனைக்கு ஓடோடி வந்த அமைச்சர்..!

By Thiraviaraj RMFirst Published May 13, 2021, 10:54 AM IST
Highlights

ஏற்கனவே 6 பேர் இறந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஆகியோர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமணையில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 3 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத காரணத்தால் ஆம்புலன்சிலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் தீவிரத்தன்மை அதிகம் கொண்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தேவைப்படுகின்றன. ஆனால், அந்த வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் கிடைக்காத இடங்களிலிருந்து ஏராளமானோர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸில் வருகின்றனர்.

அப்படி நேற்று வந்த 25 பேர் படுக்கைக்காக ஆம்புலன்ஸிலேயே சுமார் 4 மணி நேரம் காத்துக்கிடக்கும் சூழல் ஏற்பட்டது. அங்கு ஆயிரத்து 200 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பிவிட்டதால், அவர்களை மருத்துவமனையில் சேர்க்க முடியாத இக்கட்டான நிலை உருவானது. இதனால் சிகிச்சையே பெற முடியாமல் நான்கு கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து, அரசு மருத்துவர்கள் ஆம்புலன்ஸூக்கே நேரடியாகச் சென்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர், ஆக்சிஜன் படுக்கைகள் அடுத்தடுத்து காலியானதால், எஞ்சிய 21 நோயாளிகளும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் வந்தவர்களில் 3 பேர் சிகிச்சை பெற முடியாமல் அதே வாகனத்தில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஏற்கனவே 6 பேர் இறந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஆகியோர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமணையில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 

click me!