தமிழகத்தில் மக்கள் ஏற்றுக் கொள்ளாத ஆட்சி நடக்கிறது – ஜி.கே.வாசன் வேதனை

 
Published : Mar 02, 2017, 02:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
தமிழகத்தில் மக்கள் ஏற்றுக் கொள்ளாத ஆட்சி நடக்கிறது – ஜி.கே.வாசன்  வேதனை

சுருக்கம்

people didnt accept ruling party in tamil nadu

தமிழகத்தில் மக்கள் ஏற்றுக் கொள்ளாத ஆட்சி நடக்கிறது – ஜி.கே.வாசன் கடும் வேதனை

தமிழகத்தில் மக்கள் ஏற்றுக் கொள்ளாத ஆட்சி நடந்து வருகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நீடிக்குமா? என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அதிமுகவில் உள்ள யாரையும் மக்கள் ஏற்று கொள்ளவில்லை. அதேபோல், முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியையும் யாரும் ஏற்கவில்லை. மக்கள் விரும்பாத ஒருவரை, தலைவராக கொண்டு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்தி வருகிறார். இது வேதனையாக உள்ளது.

மக்களின் விருப்பத்தை கேட்காமல், ச்சிகலா தரப்பு எம்எல்ஏக்கள், எடப்பாடியை ஆதரவளித்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியுள்ளனர். இதனால், அவரும் முதலமைச்சர் பதவியில் உட்கார்ந்துவிட்டார். இந்த ஆட்சி நீடிக்குமா..? நீடிக்காதா என்ற சந்தேகம்எழுந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு