காடுவெட்டி குரு பெயரை சொன்னதுமே அதிர்ந்த நெய்வேலி... ஆடிப்போன அன்புமணி! மறைந்தும் மாஸ் காட்டிய மாவீரன்!!

By sathish kFirst Published Jan 18, 2019, 2:43 PM IST
Highlights

நெய்வேலியில் மூன்றாவது நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக நிலங்களைக் கையகப்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பாமக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காடுவெட்டி குருவின் பெயரை சொன்னதுமே கூட்டமே விசில், கைதட்டல் என அந்த இடமே அதிர்ந்தது.

நெய்வேலி பகுதியில் உள்ள 26 கிராம மக்களின் வாழ்வாதாரங்களை இழக்க முடியாது. மாறாக, நெய்வேலியில் சுரங்கம்-3 அமைக்கும் திட்டத்தை என்.எல்.சி நிறுவனமும், தமிழக ஆட்சியாளர்களும் உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தி வரும் கடந்த மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை காலை 10  மணிக்கு நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் பாமக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமகவின் இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இப்போராட்டத்தில் நெய்வேலி மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பாமக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில்,  அன்புமணி உரையாற்றுவதற்கு முன்பாக பேசிய மாநில சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் கோவிந்தசாமி, நெய்வேலியில் சுரங்கம்-3 அமைக்கும் திட்டத்தை பற்றி பேசினார் அப்போது, அரியலூரில் ஜலக்  ஜெயங்கொண்டம் லீக்கனட் கார்ப்பரேஷன் தொடங்கினார்கள் அப்போது அதை எதிர்க்கும் போராட்டம் மாவீரன் குரு அவர்கள் தலைமையில் நடந்தது என காடுவெட்டி குரு பெயரை சொன்னதும் கரகோஷமும், விசில் சத்தமும் என கைதட்டல் அடங்கவே சுமார் மூன்று நிமிடங்கள் ஆனது. 

அடுத்ததாக மருத்துவர், சின்னய்யா, அன்புமணி என தொடர்ந்து கைதட்டலை திசைதிருப்ப பேசினார் கோவிந்தசாமி ஆனால் தொண்டர்களும் வன்னிய இளைஞர்களும் கத்தும் சத்தம் வெகுநேரம் ஆகியும் அடங்கவே இல்லை. அதுவும் அந்த கூட்டத்தில் அதிகமாக அமர்ந்திருந்தது பெண்கள் தான். பெண்களே காடுவெட்டி குருவின் பேரை சொன்னதுமே கைத்தட்டலில் அந்த இடமே அதிர்ந்தது.

click me!