மூன்று ’டி’க்களால் தொல்லை.. பாண்டிச்சேரியில் பொங்கிய மு.க.ஸ்டாலின்..!

Published : Apr 11, 2019, 02:17 PM ISTUpdated : Apr 11, 2019, 02:20 PM IST
மூன்று ’டி’க்களால் தொல்லை.. பாண்டிச்சேரியில் பொங்கிய மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

’3 டி’ களால் நாட்டிற்கு தொல்லையாக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

’3 டி’ களால் நாட்டிற்கு தொல்லையாக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

புதுச்சேரியின் தட்டஞ்சாவடி பகுதியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ''இந்த புதுச்சேரிக்கு நான் புதிதானவன் அல்ல. புதுச்சேரியும் எனக்கு புதிதல்ல. நான் இங்கு வாக்கு கேட்க மட்டும் வரவில்லை. இந்த மாநிலத்தில் புரட்சி முதல்வராக இருக்கும், இங்கு வந்திருக்கும் முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி கூறவும் தான் வந்தேன். கழக தலைவர் கலைஞர் மறைவிற்கு பின்னர், அவரை கவுரவிக்கும் வகையில் பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். 

கலைஞருக்கு வெண்கல சிலை, காரைக்காலில் முக்கிய சாலைக்கு கலைஞர் பெயர், மற்றும் பட்டமேற்படிப்பு மையத்திற்கு கலைஞர் பெயர் என கூறினார். எனவே அவருக்கு என் நன்றியை இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தின் முன் தெரிவித்துக் கொள்கிறேன். புதுவை மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர் கலைஞர்.  

ஆனால், அதிமுக - பாஜக கூட்டணியால் புதுச்சேரி மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. பாஜக தேர்தல் அறிக்கை பொய்யானது. எனவே தான், பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மோடியை மோசடி என்றே கூப்பிடுங்கள் என கூறி வருகிறேன். வெளிநாடு பிரதமர் போல் மோடி செயல்படுகிறார். மக்கள் விருப்பப்படி நீங்கள் நடக்க விரும்புவதாக கூறுகிறீர்கள். அப்படி செய்ய வேண்டும் என்றால் ஆட்சியை விட்டு விலகுங்கள். அதுவே மக்கள் விருப்பம்.

 

நாட்டுக்கு மோடி, தமிழகத்திற்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண் பேடி ஆகிய 3 ‘டி’ யினால் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர் என்பதே உண்மை’’ என அவர் பேசினார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!