அன்புமணியை தோற்கடித்தே ஆக வேண்டும்... சபதமேற்று ஜெ., பாணியை கையிலெடுத்த மு.க.ஸ்டலின்..!

Published : Apr 11, 2019, 01:08 PM IST
அன்புமணியை தோற்கடித்தே ஆக வேண்டும்... சபதமேற்று ஜெ., பாணியை கையிலெடுத்த மு.க.ஸ்டலின்..!

சுருக்கம்

தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிடும், அன்புமணியை எப்படியாவது வீழ்த்தியே ஆக வேண்டும் என சபதம் ஏற்றுள்ளார் மு.க.ஸ்டாலின்.

தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிடும், அன்புமணியை எப்படியாவது வீழ்த்தியே ஆக வேண்டும் என சபதம் ஏற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். 

பாமக எப்படியும் தங்களது கூட்டணிக்கே வரும் எனக் காத்திருந்தார் மு.க.ஸ்டாலின். பாமக பெரும் டிமாண்டுகளை வைக்க, திமுக தயங்கிய நிலையில் அதிமுகவில் இணைந்தது பாமக. இது மு.க.ஸ்டாலின் தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ராமதாஸுக்கு வெட்கமில்லையா? எனக் கேட்டு கடுப்படித்தார் ஸ்டாஸ்லின். அதிமுகவை விட பாமகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஸ்டாலின். 

இந்த நிலையில், தருமபுரி தொகுதியில் களமிறங்கி உள்ள ராமதாஸ் மகன் அன்புமணியை தோற்கடித்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கி இருக்கிறார் மு.க.ஸ்டலின். அதற்காக அதிமுகவில் இருந்து திமுகவில் ஐக்கியமாகியுள்ள செல்வகணபதியிடம் அந்த அசைண்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த, 1999ல் நடந்த, மக்களவை தேர்தலில், சேலம் தொகுதியில், திமுக - பாமக கூட்டணி சார்பில், வாழப்பாடி ராமமூர்த்தி போட்டியிட்டார். அவருக்கு போட்டியாக, அதிமுக, சார்பில், செல்வகணபதியை களமிறக்கினார் ஜெயலலிதா. இருவரும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், வன்னியர் சமுதாயத்திற்கு எதிராக, கருணாநிதியும், ராமதாஸும் செயல்பட்டதை செல்வகணபதி முன்னிலைப்படுத்தினார். 

இதனால், வன்னியர் சமுதாயத்தினரின் ஓட்டுக்கள், அதிமுக - திமுக என சிதறின. மற்ற சமுதாயத்தினர் அதிகமாக உள்ள பகுதிகளில், பாமகவுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்தி, அந்த தேர்தலில், செல்வகணபதி வெற்றி பெற்றார். அதே பாணியில், அன்புமணியை வீழத்துவதற்கு செல்வகணபதி தலைமையிலான குழு அமைக்கப்பட்டு, தேர்தல் பணியை ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார். அன்புமணியை வீழ்த்தி காட்டினால், சேலத்தில், வீரபாண்டி ஆறுமுகத்திற்கு கொடுத்த முக்கியத்துவம், உங்களுக்கு தரப்படும் என, செல்வகணபதியிடம், ஸ்டாலின் உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.  

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!