ப்ளைட் பிடித்து வந்து ஓட்டு இல்லாமல் திரும்பிய அப்பல்லோ ரெட்டியின் மகள் ...வீடியோ

Published : Apr 11, 2019, 01:22 PM IST
ப்ளைட் பிடித்து வந்து ஓட்டு இல்லாமல் திரும்பிய அப்பல்லோ ரெட்டியின் மகள் ...வீடியோ

சுருக்கம்

விஜய் நடிப்பில் வெளிவந்த ‘சர்கார்’படக் கதையை நினவூட்டும் விதமாக அப்பல்லோ மருத்துவமனைகளின் உரிமையாளர் பிரதாப் ரெட்டியின் மகள் சோபனா வெளிநாட்டிலிருந்து ஃப்ளைட் பிடித்து வந்து ஓட்டுப்போட முடியாமல் வெறுங்கையோடு திரும்பியிருக்கிறார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,’எனது வாக்கு நீக்கப்பட்டுவிட்டது குடிமகளாக ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன்’ என்று ஷோபனா தெரிவித்துள்ளார்.

ஆந்திரா மாநிலத்தில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.  தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி புதிய கட்சியாகக் களமிறங்கியுள்ளது.  பாஜக, காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் களமிறங்கியுள்ளன.இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மகள் ஷோபனா குடிமகளாக தான் ஏமாற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வீடியோ ஒன்றில் அவர் பேசும்போது, “ எனது வாழ்நாளில் இந்திய குடிமகளாக இது மோசமான நாளாகும்.  நான் ஒட்டு போடுவதற்காக வெளி நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். எனது வாக்கு நீக்கப்பட்டுள்ளது. எனது வாக்கு முக்கியமில்லையா? இது மிகப் பெரிய குற்றம்.யாரோ  இங்கு அனைவரையும் முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள்.  இதனை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!