ஒய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்க கால அவகாசம். அரசு ஆணை.

Published : May 28, 2021, 10:24 AM IST
ஒய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்க கால அவகாசம். அரசு ஆணை.

சுருக்கம்

ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா முதல் அலையின் போது ஓய்வூதியதாரர்கள் பாதுகாப்பு கருதி ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஓப்படைக்கலாம் என அரசு அறிவித்து இருந்த நிலையில், கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு கொரோனா பரவல் குறையாததால் சான்றிதழ் ஒப்படைக்க விலக்கு அளிக்கபட்டது.

ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல்,மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் உயிர்வாழ் சான்றிதழ், வேலை இல்லாதற்கான சான்றிதழ், திருமணம் அல்லது மறுமணம் செய்ததற்கான சான்றிதழை அந்தந்த மாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். 

ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா முதல் அலையின் போது ஓய்வூதியதாரர்கள் பாதுகாப்பு கருதி ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஓப்படைக்கலாம் என அரசு அறிவித்து இருந்த நிலையில், கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு கொரோனா பரவல் குறையாததால் சான்றிதழ் ஒப்படைக்க விலக்கு அளிக்கபட்டது. 

இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்த ஆண்டுக்கான சான்றிதழையும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு மாற்றாக  ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர், மாதத்தில் உரிய அதிகாரிகளிடம்  ஒப்படைகலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகம் பாதிக்க கூடிய வயதினராக ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இருப்பதால் அவர்களின் நலனை அரசு கருத்தில் கொண்டு கால நீட்டிப்பு செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
PREV
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?