வீடுதேடி வரும் ஊதியம்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published May 30, 2020, 1:44 PM IST
Highlights

100 நாள்  வேலைத்திட்ட பணியாளர்களுக்கு வீட்டிற்கே சென்று கூலி வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். 3 மாதத்திற்கு இந்த புதிய நடைமுறை தொடரும் என அறிவித்துள்ளார். 

100 நாள்  வேலைத்திட்ட பணியாளர்களுக்கு வீட்டிற்கே சென்று கூலி வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். 3 மாதத்திற்கு இந்த புதிய நடைமுறை தொடரும் என அறிவித்துள்ளார். 

ஊரடங்கால் உணவு, வருமானமின்றி தவிக்கும் மக்களுக்கு அரசு பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகிறது. கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சிறு தொழில் செய்வோருக்கு நிதியுதவி தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கான கடனுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வங்கிகளை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வீடுகளுக்கே சென்று கூலியை வழங்க வேண்டும் என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 3 மாதங்களுக்கு இந்த நடைமுறை தொடரும் என்றும் கூறி உள்ளார்.

இதுவரை 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வங்கிக்கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்பட்டது. வங்கிகளுக்கே சென்று சம்பளத்தை பெற்று வந்தனர். தற்போது ஊரடங்கால் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, நேரடியாக பணத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

click me!