தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..!

By vinoth kumarFirst Published May 30, 2020, 12:51 PM IST
Highlights

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்;- தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். ஆன்லைன் வகுப்புகள் சம்பந்தமாக எந்தக் குழப்பமும் வேண்டாம். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றுதான் கூறினேன். 

தற்போது கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டும்தான் கல்வி கற்றுத் தர முடியும். எனவே ஆன்லைன் மூலம் பாடம் எடுக்க தடையும் இல்லை. மாணவர்கள் எந்த பள்ளிகளில் படித்தார்களோ அந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம். மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். 

பள்ளித்திறப்பு தாமதமாவதால் பாடங்களை குறைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் அறிக்கை அளித்த பின் பாடங்களை குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார். 

click me!