இனி பழைய படியே சென்னையில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க முடிவு... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்..!

By vinoth kumarFirst Published May 30, 2020, 12:27 PM IST
Highlights

 கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு புளியந்தோப்பில் சிகிச்சை அளிக்கப்படும். ஆக்சிஜன் சிலிண்டர் போதிய அளவில் உள்ளது. கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது. ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதை பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம். 

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1,400 படுக்கைகளுடன் தயாரான கொரோனா வார்டை சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்;- கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு புளியந்தோப்பில் சிகிச்சை அளிக்கப்படும். ஆக்சிஜன் சிலிண்டர் போதிய அளவில் உள்ளது. கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது.ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதை பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம். 

கொரோனா நோயாளிகளுக்கு வீட்டில் இருக்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் புளியந்தோப்பில் சிகிச்சை அளிக்கப்படும். சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகளிடம் வேறுபாடு காட்டாதீர்கள்.  140 சுகாதார மையங்களில் காய்ச்சலை அறிய சோதனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 230 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவில் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என்றார். 

மேலும், பேசிய அமைச்சர் சமூக பரவல் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் கொரோனா சிகிச்சையில் தாமதம் ஏற்படாமல் இருக்க கூடுதலாக 10 இடங்களில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை மையத்தில், சிறப்பு மருத்துவ குழு முழுநேரமும் செயல்படும்.  காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு சென்னையில் 140 நகர்ப்புற சுகாதார மையங்களில் பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

click me!