சாதி பிரிவினையை உருவாக்கியது பார்ப்பனம் அல்ல... திமுகவின் ஆழ்மன சாதிய உணர்வு- ஷ்யாம் கிருஷ்ணசாமி பதிலடி

By Thiraviaraj RMFirst Published May 30, 2020, 11:16 AM IST
Highlights

ஒரு காலத்தில் சாதியின் அடையாளம் பார்ப்பனர்கள் என்று சொன்னார்கள். இல்லை. திராவிடம் தான் சாதியின் நவீன அடையாளம் என புதிய தமிழகம் கட்சியில் இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

ஒரு காலத்தில் சாதியின் அடையாளம் பார்ப்பனர்கள் என்று சொன்னார்கள். இல்லை. திராவிடம் தான் சாதியின் நவீன அடையாளம் என புதிய தமிழகம் கட்சியில் இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

அவர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’‘இட ஒதுக்கீடு பிச்சை, மூன்றாம் தரம்’என்பதெல்லாம் ஏதோ வாய் தவறி வந்த வார்த்தைகள் அல்ல, இது ஆழ்மனதில் பல்லாண்டுகாலம் புதைந்து கிடந்த சாதிய உணர்வுகளின் வெளிப்பாடு. ஒரு காலத்தில் சாதியின் அடையாளம் பார்ப்பனர்கள் என்று சொன்னார்கள். இல்லை. திராவிடம் தான் சாதியின் நவீன அடையாளம். ‘பார்ப்பன இந்து மதம் தான் சாதியை உறுவாக்கியது’எந்த சாதியை உறுவாக்கியது?

மறவர், தேவேந்திரர், கோனார், வன்னியர், சாம்பவர் என்று எவரும் தங்கள் சாதி வேற்றவர் உறுவாக்கியது என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இங்க ஒவ்வொரு சாதிக்கும் பெருமைகள் உண்டு, வேறுபாடுகள் தான் கலையப்பட வேண்டியவை. இந்த மண் சார்ந்த வழிபாட்டு முறைகள், கலாச்சாரம், பண்பாட்டைத்தான் நாங்கள் இந்து மதம் என்று சொல்லுகிறோம்.

கலைய வேண்டிய சாதி வேறுபாடுகள் உண்டு. அது ‘பார்ப்பன’இந்து மதம் உறுவாக்கியது என்பது திராவிடத்தின் வாதம். அது நிலத்திணைகளை சார்ந்த வேறுபாடுகள், அதிகார மோதல் என்பது எங்கள் வாதம்'' என அவர் தெரிவித்துள்ளார்.

click me!