இந்தியாவுக்கு வரும் ஆபத்தை துல்லியமாக கணித்த பஞ்சாங்கம்..!! சீனா, பாகிஸ்தான் சதி குறித்தும் எச்சரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published May 30, 2020, 1:36 PM IST
Highlights

முக்கிய நகரங்களில் தீவிரவாதிகளால் நாசவேலை ஏற்படும்.  அண்டை நாடான சீனா, பாகிஸ்தான் போன்றவை வலுக்கட்டாயமாக சண்டைக்கு வர நேரும்.  உலக நாடுகளில் இந்தியாவின் பெயரை கெடுக்கும் முயற்சி தோல்வியில் முடியும்.  

உலகமே கொரோனாவை எதிர்த்து போராடி வரும் நிலையில்,  இந்தியா புயல்,  வறட்சி, வெட்டுக்கிளி,  இந்திய-சீன எல்லையில் போர் பதற்றம் என பல்முனை  தாக்குதல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் 2020-2001 ஆம் ஆண்டுக்கான " சுத்தி வாக்கிய சர்வ முகூர்த்த  பஞ்சாங்கத்தில் " நாடு சந்தித்து வரும் ஆபத்துக்கள் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது.  அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளதன் முழு விவரம் :-  இவ்வாண்டு வெட்டுக்கிளி பூச்சிகள் ரீங்காரம்  செய்யும்.  தவளைகள் கத்தும்,  செங்கல் சூளை நன்றாக நடப்பதும்,  மருத்துவமனைகளுக்கு அடிக்கடி  ஊக்கத்தொகை கிடைப்பதும்,  நல்ல யோக பலனும் வானத்தில் ஒரு புதிய நட்சத்திரம் 25-7 -2020 அன்று சனிக்கிழமை கிழக்கே உதயமாகி மறையும், அதனால் மின்காந்த அலை பாதிப்பு ஏற்பட்டு வான்வெளி போக்குவரத்தில் பிரச்சனை உண்டாகும். செல் போன் டவர்கள் மற்றும் டிஸ் கம்பிகள் கடுமையாக பாதிக்கும்.  கலங்கரை விளக்கம் சில நாட்கள் செயலிழந்து போகும்,  இதனால் மாலுமிகளுக்கு திசை தெரியாமல் தவிக்க நேரும்.  அடிக்கடி விரைவாக பொழுது கட்டும்,  10-6-2020 தேதிகளில் மாற்றங்கள் பல நிகழும்,  8-10-2020 தேதிகளில் சில மாற்றம் உருவாகும். 

தூரதேசம் செல்லும் சரக்கு கப்பல் தீக்கிரையாகும் , முக்கியமாக எண்ணெய் ஏற்றிவரும் சரக்கு கப்பலுக்கு தீ அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. சூறாவளி காற்று மூன்றாவது அபாய நிலைக்கு உயர்த்தப்படும். அரசியல் கட்சி தொடர்புடைய தலைவர்களுக்கு கண்டம் ஏற்படும்,  முக்கிய நகரங்களில் தீவிரவாதிகளால் நாசவேலை ஏற்படும்.  அண்டை நாடான சீனா, பாகிஸ்தான் போன்றவை வலுக்கட்டாயமாக சண்டைக்கு வர நேரும்.  உலக நாடுகளில் இந்தியாவின் பெயரை கெடுக்கும் முயற்சி தோல்வியில் முடியும்.  இயற்கை சீற்றம் புயல் வருவதை நமது விஞ்ஞானிகள் முன்னரே கண்டுபிடித்து அறிவிக்க நேரும், இதனால் பல லட்சம் மதிப்புள்ள நஞ்சை புஞ்சை பயிர்களை காப்பாற்ற நேரும்.  மூலிகை மருத்துவத்தில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும்.  பல புதிய நீர்த்தேக்கங்களை அரசு கட்டி முடிக்கும்.  சன்னியாசிகள் அரசுக்கு பொருள் உதவி செய்வர்.  இந்த ஆண்டு சிறு நிலநடுக்கம் ஏற்படும், குறிப்பாக திருச்சி, மதுரை, சிவகாசி, திருநெல்வேலி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோயமுத்தூர், பாலக்காடு, பெங்களூர், மைசூர், ஆசன், பெல்காம், மற்றும் பம்பாய். மேற்கு தொடர்ச்சி மலை அரபிக்கடலின் மையப்பகுதியில் ஏற்படும்.

வங்கக் கடலின் மைய கடல் பகுதியில் பெருத்த நிலநடுக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக பெரும்புயல் உற்பத்தியாகி, தமிழ்நாடு, கர்நாடகா, பம்பாய், கொல்கத்தா, கேரள மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகும், தமிழ்நாட்டை பலமாகத் தாக்கும், பல இன்னல்களை சமாளித்து பல சோதனைகளை முடித்து விடைபெற்று ஸ்ரீ சீதாராம, லட்சுமணர், அனுமந்தர், அருளால் சர்வமங்கலம் உண்டாகும்படி பிரார்த்திக்கிறேன்... வரும் புத்தாண்டாகிய பிலவ ஆண்டு நவதானியங்கள் வேளாண்மை குறைந்து அகால மழையும் நல்ல மழை பொழிந்து எங்கும் சுபிட்சம் உண்டாகும் சர்வ மங்களம் சுபம்.. சுபம்.. சுபம்.. என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வருமானம் இல்லாமல் வறுமையில் வாடி வருகின்றனர். மேலும் வெட்டுக்கிளிகள் குறித்து குறிப்பிட்டுள்ளபடி,  இந்தியாவின் ராஜஸ்தான் வழியாக நுழைந்துள்ள வெட்டுக்கிளிகள்,  பஞ்சாப்,  ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிர்களை கடுமையாக சேதப்படுத்திவருகின்றன.  அவைகள் கர்நாடகம் வரை வந்து தமிழகத்திலும் நுழைந்துள்ளன. அதேபோல் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி   இந்திய-சீன எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

பாகிஸ்தானும் எல்லையில் தகராறு செய்து வருகிறது.  நிலநடுக்கம் புயல் ஏற்படும் என பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி,  வங்கக்கடலில் ஆம்பன் என்ற புயல் உருவாகி  மேற்கு வங்கம், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களை கடுமையாக பாதித்துள்ளது.  நாட்டில் ஏற்பட்டுவரும் அசம்பாவிதங்களை முன்கூட்டியே கணித்துள்ள இந்த பஞ்சாங்கம் மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.   இந்த இக்கட்டுகளில் இருந்து தப்பிக்க பரிகாரங்கள் என்ன என்பது குறித்து மக்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
 

click me!