செத்த பாம்பான பா.ம.க.வை பற்றி பேசுவது கால விரயம்: வெளுத்துக் கட்டும் வேல்முருகன்

By Vishnu PriyaFirst Published Oct 7, 2019, 6:01 PM IST
Highlights

ஒரு காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஓஹோன்னு இருந்தது. அப்போது டாக்டர் ராமதாஸின் தலைமையிலான அக்கட்சியின் தூண்களாக காடுவெட்டி குரு, வேல்முருகன் உள்ளிட்ட பல முக்கிய தலைகள் இருந்தனர். ஆனால் சில பல பிரச்னைகளால் அவர்களில் சிலர் பா.ம.க.விலிருந்து பிரிந்து சென்றனர். 

ஒரு காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஓஹோன்னு இருந்தது. அப்போது டாக்டர் ராமதாஸின் தலைமையிலான அக்கட்சியின் தூண்களாக காடுவெட்டி குரு, வேல்முருகன் உள்ளிட்ட பல முக்கிய தலைகள் இருந்தனர். ஆனால் சில பல பிரச்னைகளால் அவர்களில் சிலர் பா.ம.க.விலிருந்து பிரிந்து சென்றனர். 

தீரன் உள்ளிட்டோர் அ.தி.மு.க. சென்றனர். வேல்முருகனோ தனிக்கட்சி துவக்கினார். இந்த நிலையில் கடந்த சில  தேர்தல்களாக பெரும் பின்னடைவை சந்தித்துக் கொண்டுள்ளது பா.ம.க. அதிலும் வன்னியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளிலும் கூட மிக மோசமான சரிவை சந்தித்திருக்கிறது இக்கட்சி. இதனால் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற பழைய வலுவான நிர்வாகிகளை மீண்டும் கட்சிக்கு இழுக்க துவங்கியிருக்கிறார் ராமதாஸ். அவர்களில் தீரன் வந்து இணைந்து கட்சிப் பணியை துவக்கிவிட்டார்.

அடுத்து வேல்முருகனை இழுக்கும் ஆபரேஷனைத்தான் டாக்டர் துவக்கியுள்ளார்! என்று கூறப்படும் நிலையில், அவரும் துவக்கத்தில் அதற்கு சம்மதம் தெரிவிப்பது போலவே பேசினார். ஆனால் இடையில் யார் என்ன மாற்றினார்களோ தெரியவில்லை இப்போது மீண்டும் ராமதாஸை எதிர்த்து செம்ம தாக்கு தாக்கிக் கொண்டிருக்கிறார். 

சமீபத்திய பேட்டியில் “பா.ம.க. ஒரு செத்துப்போன பாம்பு. எனவே அதைப் பற்றி நான் பேசுவதுமில்லை, விமர்சிப்பதும் இல்லை. மக்கள் மத்தியில் இருந்து அக்கட்சி விலகிவிட்டது. அதனால்தான் மக்களுக்கான போராட்டங்களை பா.ம.க. நடத்துவதில்லை. ஆனால் நாங்கள் மக்களோடு இருந்து, அவர்களுக்காகவே போராட்ட குரல் கொடுக்கிறோம்.” என்றிருக்கிறார்.

 
இந்த நிலையில், மீண்டும் பா.ம.க.வுடன் இணையும் முடிவிலிருந்த வேல்முருகனை தடுத்து நிறுத்தியது தி.மு.க.தான். உள்ளாட்சி தேர்தலில் வடக்கு மாவட்டத்தில் கணிசமான இடங்கள் தருவதாக சொல்லியுள்ளனர்! என்கிறார்கள். 

இந்த ‘வேல்’ஐ வைத்து பா.ம.க.வை பிளப்பதே ஸ்டாலினின் ஸ்கெட்ச். 

click me!