பார்த்திபன் ஒத்த செருப்பு படம் விருது.. திமுக எம்பி செந்தில்குமாருக்காக வருத்தம் தெரிவித்த உதயநிதிஸ்டாலின்.!

By T BalamurukanFirst Published Oct 23, 2020, 9:12 PM IST
Highlights

பார்த்திபன் நடித்து, இயக்கி, தயாரித்த ‘ஒத்த செருப்பு’படத்துக்கு கடந்த 2019ம் ஆண்டுக்கான மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து திமுக எம்.பி. எஸ்.செந்தில்குமார், “அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்” என்று டுவிட் போட்டிருந்தார். இந்த ட்வீட்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் திமுக இளைஞர் அணிச்செயலாளர் உதயநிதிஸ்டாலின்.

பார்த்திபன் நடித்து, இயக்கி, தயாரித்த ‘ஒத்த செருப்பு’படத்துக்கு கடந்த 2019ம் ஆண்டுக்கான மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து திமுக எம்.பி. எஸ்.செந்தில்குமார், “அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்” என்று டுவிட் போட்டிருந்தார். இந்த ட்வீட்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் திமுக இளைஞர் அணிச்செயலாளர் உதயநிதிஸ்டாலின்.

விருது கொடுத்துவிட்டதால் பார்த்திபன் பாஜகவுக்கு போய்விடுவார் என்ற கருத்திலும், பாஜக தயவால்தான் விருது கிடைத்தது என்ற கருத்திலும் அவர் டுவிட் போட்டிருந்தது ரசிகர்களை உசுப்பேத்திவிட்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட பார்த்திபனுக்கு கேட்கவா வேண்டும். அவரும் டுவிட்டரில் தக்க பதிலடி கொடுத்து வந்தார். உதயநிதி ஸ்டாலின் இடையில் புகுந்து வருத்தம் தெரிவித்ததால், பார்த்திபன் இந்த விவகாரத்தை அத்துடன் முடித்துக்கொண்டார்.

‘இரவின் நிழல்’என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர,வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை! நாளையே மழை வரலாம், வரும் வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை!(மலரும் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் தாமரையைக் கருப்பாக கற்பனை செய்ய வேண்டாம்.

பாரா’ளுமன்ற உறுப்பினர் திருமிகு செந்தில்குமார் அவர்கள் “அண்ணனுக்கு பாஜக-வுல ஒரு சீட் பார்சல்”என்று ட்வீட்'டிருக்கிறார். அண்ணனுக்கு நான் நன்றியை பார்சல் செய்வதற்குள் அவரது இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறது.  மக்கள் பணிகளில் ஆர்வம் உண்டு ஆனால் அதற்கு பெயர்தான் அரசியலா?என அறியாதவன் அடியேன்! உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும் சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான "ஒத்த செருப்பு"க்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப் படுத்தினால் மனம் வலிக்கும்!

உரியது கிடைக்காத போது ஆனந்த’மாய் தூக்கி எறிந்து விட்டு மேடை இறங்குவேனேத் தவிர,அதைத் “தா”இதைத் “தா” வென மரை’முகமாக என் முகம் மலரமாட்டேன்!அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன். உசுப்’பேத்தாதீங்க பாஸ்!!!


 சூரியன் உதிக்குமுன் கண் விழித்த எனக்கு,திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமும், உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையுமான என் நண்பர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதை கேட்டேன். அவருடைய பெருந்தன்மையைக் கண்டு என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன்.
"வாய கொடுத்து வசமா வாங்கிட்டான்னு சொல்லுவாங்க அது இதுதான் போல"......!
 

click me!