பகுதிநேர விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்… அண்ணாமலை வலியுறுத்தல்!!

By Narendran S  |  First Published Oct 7, 2022, 8:10 PM IST

பகுதிநேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உடனடியாக அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 


பகுதிநேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உடனடியாக அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்காலத்தின் வளமான சமுதாயத்தை உருவாக்கும், மாபெரும் பொறுப்பிலே ஈடுபட்டிருப்பது ஆசிரியர் சமுதாயம். அந்த ஆசிரியர் சமுதாயத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறிப் போனால், அவர்களால் எப்படி எதிர்காலத்தின் வளமான சமுதாயத்தை உருவாக்க முடியும்? பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பகுதிநேர, முழுநேர தொகுப்பூதிய, விரிவுரையாளர்களும் திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது, ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

இதையும் படிங்க: திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

Tap to resize

Latest Videos

தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் அமையப்போகும் திமுக அரசு ஆசிரியர்களுக்கான அரசு என்றும் கண்டிப்பாக பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்து அதன் அடிப்படையில் ஆட்சி அமைத்த திமுக அரசு, தாங்கள் அளித்த எல்லா வாக்குறுதியிலும், ஏமாற்றியதைப் போல இந்த வாக்குறுதிக்கும், ஏமாற்றத்தையே பதிலாக தந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான பகுதிநேர தகுதி பெற்ற, அனுபவம் பெற்ற, விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்யாமல், புதிதாக ஆசிரியர் நியமன ஆணையத்தின் மூலம் எடுக்கப் போகிறோம் என்று அரசு சொல்வது, இத்தனை ஆண்டுகளாக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வந்த அத்துணை ஆசிரியர்களுக்கும் இழைக்கப்படும் நம்பிக்கை துரோகம்.

இதையும் படிங்க: அக்டோபர் 17ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.. வெளியானது அறிவிப்பு !

நினைத்த மாத்திரத்தில் எந்த பணி பாதுகாப்புபோ, பணிக்கொடையோ இல்லாமல், ஆசிரியர்களை வீட்டிற்கு அனுப்ப நினைக்கும் திமுக அரசு, இவர்களின் கோரிக்கையை பரிவுடன் கவனிக்க வேண்டும். யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்ற திருக்குறளை திமுக அரசுக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். திடீரென்று விரிவுரையாளர்களை விரட்ட நினைப்பது மனிதாபிமானமற்ற எதேச்சாதிகாரமான செயலாகும். பத்தாண்டு காலமாக, அரசு ஆவன செய்யும் என்ற நம்பிக்கையில் தன்னலம் இல்லாமல் பணியாற்றி, தற்போது தவித்துக் கொண்டிருக்கும் பகுதிநேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களின் கோரிக்கையை, தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!