துணைப் பொதுச்செயலாளராக அறிவித்த கையொடு பொதுத் தொகுதிக்கான விசிக வேட்பாளராகிறார் ஆதவ் அர்ஜுனா!

By vinoth kumar  |  First Published Feb 17, 2024, 6:42 AM IST

சமீபத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சி சிறுகனூரில் நடந்த வெல்லும் ஜனநாயகம் மாநாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்தது ஆதவ் அர்ஜுனாவின்  வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனம் வெற்றிகரமாக நடத்திக் காட்டியது. 


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை பொதுத் தொகுதி வேட்பாளராக அறிவிக்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சி சிறுகனூரில் நடந்த வெல்லும் ஜனநாயகம் மாநாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்தது ஆதவ் அர்ஜுனாவின்  வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனம் வெற்றிகரமாக நடத்திக் காட்டியது. கடந்த ஓராண்டில் விசிகவில் நிகழ்ந்து வரும் பல்வேறு மாற்றங்களுக்கும் ஆதவ் அர்ஜுனா முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: பொன்.ராதாகிருஷ்ணணை தேடி வரப்போகும் முக்கிய பதவி? அப்படினா கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் இவரா?

குறிப்பாக வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் ஆதவ் அர்ஜுனாவை மேடையேற்றி அவருக்கு பாராட்டுகளைத் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இதனையடுத்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சி பொறுப்பு மட்டுமல்லாமல் அவரை மக்களவை தேர்தலில் வேட்பாளராக களமிறக்கவும் திருமாவளவன் திட்டமிட்டுள்ளார். 

இதையும் படிங்க: விசிக துணை பொதுச்செயலாளர் ஆனார் ஆதவ் அர்ஜுனா.. இவர் யாருடைய மருமகன் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயீடுவிங்க.!

கடந்த முறை 2 மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த முறை 3 தொகுதிகளை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு பொதுத் தொகுதி அடங்கும். கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் இரண்டில் ஒரு பொதுத் தொகுதியை திமுகவிடம் திருமாவளவன் கேட்டு வருகிறார். அந்த தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவை நிற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா கோவை பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் என்பது குறிப்பித்தக்கது. 

click me!