தீவிரவாதிகளுக்கு எதிராக நரசிம்ம அவதாராம் எடுத்த மோடி... புகழ்ந்து தள்ளிய ஓபிஎஸ்..!

Published : Mar 01, 2019, 04:39 PM IST
தீவிரவாதிகளுக்கு எதிராக நரசிம்ம அவதாராம் எடுத்த மோடி... புகழ்ந்து தள்ளிய ஓபிஎஸ்..!

சுருக்கம்

தீவிரவாதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி நரசிம்ம அவதாராம் எடுத்துள்ளார் என தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். 

தீவிரவாதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி நரசிம்ம அவதாராம் எடுத்துள்ளார் என தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ரூ.40,000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், கன்னியாகுமரி வந்த அவர், விவேகாந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதனையடுத்து விவேகானந்தா மண்டபம், திருவள்ளூவர் சிலை இடம் பெற்ற படத்தை பிரதமருக்கு நினைவு பரிசாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில் துடிப்பான பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த விழா விரைவில் அடையவுள்ள இமாலய வெற்றிக்கான தொடக்க விழாதான் இது. 

நரசிம்ம அவதாரம் எடுத்தது போல் பிரதமர் மோடி தீவிரவாதிகளை வதம் செய்துகொண்டிருக்கிறார். அவரது செயல்பாடுகள் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு இது எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் பாராட்டும் வகையில் பிரதமரின் செயல்பாடு உள்ளது என ஓபிஎஸ் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!