துப்புரவு தொழிலாளர்களின் கால்களை ஏன் கழுவினேன்..? முழுசா தெரிஞ்சா இப்படி கேட்க மாட்டீங்க? மோடி அதிரடி விளக்கம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 1, 2019, 3:36 PM IST
Highlights

உத்தரப்பிரதேசத்தில் துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை பிரதமர் மோடி கழுவியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர்களது பாதங்களை கழுவியது தொடர்பாக பிதமர் மோடி அதிரடியாக விளக்கமளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை பிரதமர் மோடி கழுவியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர்களது பாதங்களை கழுவியது தொடர்பாக பிதமர் மோடி அதிரடியாக விளக்கமளித்துள்ளார்.

கன்னியாகுமரி விழாவிற்கு வருவதற்கு முன் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களுடன் அப்போது மராட்டிய மாநிலம் புனே நகரை சேர்ந்த தொண்டர் எழுப்பிய ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், ’’உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளாவில் துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை நான் கழுவியதை எதிர்க்கட்சிகள் அரசியல் தந்திரம் என விமர்சனம் செய்கின்றனர். 

சுமார் 22 கோடி பேருக்கும் மேல் கும்பமேளாவில் புனித நீராடி இருந்தாலும் அப்பகுதி தூய்மையாக வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணமாக துப்புரவு தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களின் பாதங்களை கழுவினேன். இது மதிப்பின் வெளிப்பாடு.

இதை விமர்சிப்பவர்களுக்கு முழுமையாக என்னை பற்றி தெரியாது. நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, என் வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கு 4-ம் நிலை ஊழியரை அழைத்து வருமாறு கூறினேன். அப்போது அதிகாரிகள் அழைத்து வந்தது ஒரு தலித் ஊழியர். அந்த ஊழியரின் மகள் கையில் பூஜை செய்த கலசத்தை நான் கொடுத்தேன். இது கலாசாரத்தின் ஒரு அங்கம்’’ என அவர் தெரிவித்தார்.

click me!