போற போக்குல கொளுத்திப்போட்ட பெங்களூரு புகழேந்தி.. குஷியில் ஓபிஎஸ்.. எரிச்சலில் எடப்பாடியார்..!

By vinoth kumarFirst Published Oct 19, 2021, 11:56 AM IST
Highlights

 சசிகலாவை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவதற்கு ஜெயக்குமாருக்கு என்ன உரிமை உள்ளது. வாரிசு அரசியல் செய்யலாமா? அதிமுக எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அதை கடந்து வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜாதி அரசியல் தற்போது அதிமுகவில் உருவாகி உள்ளது என முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார்.

முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- ஊரக உள்ளாட்சி தேர்தலில் 90% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ள ஆளுங்கட்சிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். திமுக நல்லாட்சியை மக்களுக்கு அளித்து வருகிறது. ஆனால், 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு கட்சி தலைமை ஒரு வாழ்த்து கூட சொல்லாதது வேதனை அளிக்கிறது.

இதையும் படிங்க;- சசிகலா இதை செய்தாலே ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும்.. கே.பி.முனுசாமி அதிரடி சரவெடி..!

அதிமுக திசைமாறி சென்றுக்கொண்டிருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும். சசிகலாவை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவதற்கு ஜெயக்குமாருக்கு என்ன உரிமை உள்ளது. வாரிசு அரசியல் செய்யலாமா? அதிமுக எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அதை கடந்து வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எனக்கு தெரிந்த வரை அதிமுக இதுபோன்ற ஒரு தோல்வியை கண்டதில்லை என வேதனையுடன் கூறினார்.

இதையும் படிங்க;- நிஜ தலைவர்களாலேயே அதிமுக அசைக்க முடியல.. நிழல் தலைவர் எல்லாம் எந்த மூலைக்கு.. சீறிய CV.சண்முகம்.!

மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ளார். நேரம் கிடைத்தால் அவரை நீக்கிவிட்டு, சசிகலாவுடன் இணைந்து கட்சியை வழிநடத்துவார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜாதி அரசியல் தற்போது அதிமுகவில் உருவாகி உள்ளதாகவும், எடப்பாடி தன் தொகுதியிலேயே தோற்றுவிட்டார் என புகழேந்தி கூறியுள்ளார்.

click me!