ஹெச்.ராஜா விரைவில் கைது... அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Oct 19, 2021, 11:46 AM IST
Highlights

பா.ஜ.க.,வை சேர்ந்த ஹெச்.ராஜா விரைவில் கைது செய்யப்படுவார் என சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி உறுதிபடக் கூறியுள்ளார். 
 

பா.ஜ.க.,வை சேர்ந்த ஹெச்.ராஜா விரைவில் கைது செய்யப்படுவார் என சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி உறுதிபடக் கூறியுள்ளார். 
 
இதுகுறித்து பேசிய அவர், ’’10 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் பல உள்ளன. இதுதொடர்பக அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் தகுதியான நபர்களை விடுதலை செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் 7 பேர் விடுதலையில் அக்கறை கொண்டு முழு முயற்சி எடுத்து வருகிறார்.

திறந்த வெளி சிறைச்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். அதற்கான இடங்கள் தேர்வு செய்யபட வேண்டும். மத்திய சிறைச்சாலை மாற்றப்படும் பட்சத்தில் இந்த இடத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.

புதிய சிறைச்சாலை அமைந்திட இடம் கிடைப்பது கடினம். செம்மொழி பூங்காவிற்காக இந்த இடம் மாற்றப்படாது. எல்லா மத்திய சிறைச்சாலைகளிலும் திறந்த வெளி சிறைச்சாலை உருவாக்கிட வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

14 ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கபட்ட சிறைவாசிகளுக்கு 10 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால், நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிபந்தனைக்கு உட்பட்டு மற்ற கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அரசு மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.

அனைவருக்கும் பொதுவான முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார். Prison Bazaarன் உற்பத்தி கொரோனா காலகட்டத்தில் குறைந்திருந்தது. தற்போது அதிகரித்துள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் இதுவரை அவர் கைது செய்யபடாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ' பிணையில் வர முடியாத பிடிவாரண்ட் உத்தரவு போலீசாருக்கு கிடைக்க பெற வேண்டும். ஹெச்.ராஜா கைது நடவடிக்கையில் அரசு தாமதம் செய்யாது"என அவர் தெரிவித்தார்.

click me!