32 ஆண்டு கால சரித்திரத்தை உடைத்தவர் ஜெயலலிதா  - உருவப்படத்திறப்பு விழாவில் ஒபிஎஸ்சின் புகழாரம்...!

Asianet News Tamil  
Published : Feb 12, 2018, 11:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
32 ஆண்டு கால சரித்திரத்தை உடைத்தவர் ஜெயலலிதா  - உருவப்படத்திறப்பு விழாவில் ஒபிஎஸ்சின் புகழாரம்...!

சுருக்கம்

panneerselvam triput to jayalalitha

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற வரிக்கு தகுதி உடையவர் ஜெயலலிதா எனவும் ஒரு முறை ஆண்ட கட்சி மீண்டும் அடுத்த முறை ஆட்சிக்கு வராது என்ற 32 ஆண்டு கால சரித்திரத்தை உடைத்தவர் ஜெயலலிதா எனவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார். 

சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சபாநாயகருக்கு நினைவு பரிசு வழங்கினர். 

ஜெயலலிதாவின் 7 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட முழு உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உருவப்படத்தின் கீழே அமைதி, வளம், வளர்ச்சி என்ற சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதிமுகவினரின் இத்தகைய செயலுக்கு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிப்பு செய்தனர். பேரவையில் எதிர்க்கட்சியினர் இருக்கைகளில் அதிமுக எம்.பி.,க்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர். 

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திரைப்படத்தை அடுத்து தலைமைச் செயலகத்திற்கு வெளியே அதிமுக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். 

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற வரிக்கு தகுதி உடையவர் ஜெயலலிதா எனவும் ஒரு முறை ஆண்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது என்ற 32 ஆண்டு கால சரித்திரத்தை உடைத்தவர் ஜெயலலிதா எனவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார். 

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசின் இதழில் இடம்பெற வைத்தவர் ஜெயலலிதா எனவும் முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை உயரவைத்தவர் ஜெயலலிதா எனவும் குறிப்பிட்டார். 

PREV
click me!

Recommended Stories

திமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. கனிமக் கொள்ளை.. முதல்வர் ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்!
அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி சட்டவிரோதம்.. தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்!