
ஒரு வழியாக சசிகலா மற்றும் தினகரனின் கண்களில் விரலை விட்டு ஆட்டி விட்டார் ஓபிஎஸ்.
பார்க்கும்போதெல்லாம் சசிகலா காலில் விழும் ஓபிஎஸ் அவரை எதிர்க்க ஆரம்பித்த நிமிடத்திலிருந்தே வீரத் தமிழராக மாறி விட்டார்.
அப்போதிருந்து தற்போது வரை சசிகலா தரப்புக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர் ஓபிஎஸ் கோஷ்டியினர்.
ஓபிஎஸ் அணியை பொறுத்தவரை ஓபிஎஸ் டயர்ட் ஆனாலும் அவரை விடுவதாக இல்லை சசிகலாவின் எதிரிகளான பி.எச்.பாண்டியன், கே.பி.முனுசாமி, மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்.
எந்த அளவுக்கு சசிகலா கோஷ்டிக்கு குடைச்சல் கொடுக்க முடியுமோ அதை விட அதிகமாகவே குடைச்சலையும் கலக்கத்தையும் கொடுக்கின்றனர்.
ஆரம்பம் முதலே எம்எல்ஏக்களை இழுத்து வருவது முதல் தற்போது இரட்டை இலை சின்னத்தை முடக்கியது வரை யாரும் நினைத்து பார்க்காத வகையில் அடி மேல் அடி கொடுத்து வருகின்றனர்.
இதனால் சசிகலா மற்றும் தினகரன் அணியினர் பெரும் கலக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஓபிஎஸ் தரப்பை பொறுத்தவரை வெளியில் அதிருப்தியாக காட்டி கொண்டாலும் உள்ளுக்குள் பயங்கர குஷியாக இருக்கிறார்களாம்.
தினகரனை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாமல் தடுத்ததே தங்களுக்கு பெரிய வெற்றி என்கின்றனர்.
தங்களுக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு 2 கண் போக வேண்டும் என்ற பார்முலாவில் வெற்றி பெற்று விட்டதாகவும் துள்ளி குதிக்கின்றனர்.
இரட்டை இலை இல்லாததால் தினகரன் வெற்றி பெற முடியாது என்பது உறுதியாகியுள்ளதாகவும் தங்கது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பரிகின்றனர் ஓபிஎஸ் ஆதரவளர்கள்.