
திமுக தலைவர் கருணாநிதி பூரண உடல்நலம் பெற வேண்டும் எனவும் அவர் அடுத்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன எனவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் பழனிச்சாமி, தமிழகத்தில் தொகுதி வாரியாக வரையறை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த பணிகள் நிறைவு பெற்றதும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
நடப்பாண்டின் இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் எனவும் கீழடி அகழாய்வு பணிகள் மீண்டும் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
கோவையில் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது அதற்காக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்த பின், ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.
இதைதொடர்ந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். அப்போது திமுக தலைவர் கருணாநிதி பூரண உடல்நலம் பெற வேண்டும் எனவும் அவர் அடுத்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன எனவும் பேசினார்.