"நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்" - ஓபிஎஸ்க்கு உறுதியளித்த பிரதமர்

 
Published : Dec 21, 2016, 11:00 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
"நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்" - ஓபிஎஸ்க்கு உறுதியளித்த பிரதமர்

சுருக்கம்

என்ன தான் நடக்குது தமிழ்நாட்டில் என்று விசாரித்தபோது பல திடுக்கிடும் சமபபவங்கள் வெளியானது. தமிழக அரசியலில் ஜெயலலிதா என்ற தடுப்பு சுவர் பாஜகவை உள்ளே நுழையாமல் தடுத்து வைத்திருந்தது. ஜெயலலிதாவின் நெருங்கிய சகாவாஅன பிரதமர் மோடியின் தயவால் 2014 பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அதன் பின்னரும் சட்டமன்ற தேர்தலிலும் எதுவும் நடக்கவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அவர் மரணத்தை அறிவிப்பதற்கு முன்னரே திரை மறைவு வேலைகள் மத்தியிலிருந்து ஆரம்பமானது. ஓபிஎஸ் தான் முதல்வர் எனபதில் மேலிடம் உறுதியாக இருந்தது. 

மத்திய அரசின் அழுத்தத்தினால் வேறு வழியில்லாமல் ஓபிஎஸ்சை ஏற்றுகொண்டாலும் மற்ற விவகாரங்களில் மேலிடம் தலையிடுவதை அனுமதிக்கவில்லை இந்நிலையில் சமீபத்தில் மணல் காண்ட்ராக்டரான சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்தது. அதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புதிய கரன்சிகளும் ,தங்கங்களும் சிக்கியது. 

இது தவிர ஏராளமான தகவல்கள் அடங்கிய சிடிக்கள் கிடைத்தது. அதில் சில அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய மேலிடத்திற்கு எதிராக சசிகலா போன்றோர் முதல்வராக வரும் தீர்மானம் போன்றவற்றை ஆளும் பாஜக ரசிக்கவில்லை. குறிப்பாக டெல்லி மேலிடம் தனது கைக்குள் வைக்க நினைக்கும் செயலுக்கு இது இடையூறாக உள்ளது.

ஓபிஎஸ்  டெல்லி செல்வதற்கு முன் கவர்னர் மூலம் சில பேச்சு வார்த்தைகள் நடந்ததும் , பின்னர் மீண்டும் ஓபிஎஸ் கவர்னர் இல்லம் செல்ல இருந்ததும் அது ரத்து செய்யப்பட்டதையும் ஏற்கனவே எழுதியிருந்தோம். அதன் பின்னர் டெல்லி சென்ற ஓபிஎஸ்க்கு கடுமையான கட்டுக்காவல் போடப்பட்டும் அதையும் மீறி அனைவரையும் அனுப்பி விட்டு 5 நிமிடங்கள் பிரதமர் தனியாக பேசினார்.

அதில் என்ன விஷயங்கள் பேசப்பட்டது என்பது தெரியவில்லை. நான் பார்த்துகொள்கிறேன் நீங்க போங்க என்று சொன்னதாகவும் அதன் பின்னர்    ஓபிஎஸ் முகமலர்ச்சியுடன் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆகவே மத்திய அரசு தனது கரத்தை இறுக்க துவங்கியுள்ளது. அதற்கு ஏற்றார்போல் பல விவகாரங்களில் அமைச்சர்கள் அதிகாரிகள் சிக்கி இருக்கும் ஆவணங்கள் கிடைத்திருப்பதே இது போன்ற ரெய்டுகளுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 

இது இத்துடன் நிற்காது. தொடரும் அதன் மூல மாநில அரசுக்கு , அதன் தலைமைக்கு நெருக்கடி ஏற்படும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து. 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு