
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைகு உரிய தளபதி அதிகரியாக இருந்தவர் ஆந்திராவை சேர்நத ராமமோகன் ராவ். கருணாநிதி ஆட்சி காலத்திலேயே, அரசு செயலாளராக இருந்த ராமமோகன் ராவ், பின்னர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும், செல்வாக்கு மிக்க அதிகாரியாக வலம் வந்தார்.
இதனாலல் ராமமோகன் ராவுக்கு, அனைத்து அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் மிக நெருக்கமாகினர். தமிழ்நாடு தவிர்த்து, ஆந்திரா கர்நாடகா, டெல்லி என அனைத்து இடங்களிலும் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி இருக்கிறார் ராமமோகன் ராவ்.
அதிமுகவின் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களை, முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் ராமமேகன்ராவ். சிக்கல் இல்லாமல் பண விஷயத்தை முடித்து கொடுத்ததால், ஜெயலலிதாவும், சின்னம்மா சசிகலாவும் கஜனா சாவியை அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
முதல்வரின் ஆலோசகராக, செகரெட்டரி 2ஆக இருந்த ராமமோகன் ராவ், 20016 அதிமுக ஆட்சியில் பதவியேற்றவுடன் தலைமை செயலாளராக பதவியேற்றார்.
செக்ரெட்டரி 2ஆக இருக்கும்போதே பல அமைச்சர்களின் வரவு, செலவு கணக்குகளை ராமமோகன் ராவ் கவனித்து வந்தார். அந்த வகையில், அவருக்கு நெருக்கமான அமைச்சர்கள் தற்போது சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்.
சேகர் ரெட்டிக்கு, எட்டப்பாடி பழனிச்சாமி மூலமாகவும், சின்னம்மா சசிகலா மூலமாகவும், மணல் கான்ட்ராக்ட் எடுத்து கொடுத்ததே ராம்மோகன் ராவ்தான் என கூறப்படுகிறது. மேலும், தென் மாவட்டங்களில் அமைச்சர் விஜயபாஸ்கர் துணையோடு குவாரி தொடர்பான பல விஷயங்கள் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கும் சிக்கல் இருக்கும் என தெரிகிறது. மேலும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரும் சிக்குவார் என தெரிகிறது. ஏனெனில் இவர்கள் யெயர் அனைத்தையும் சேகர் ரெட்டி, சிபிஐயிடம் உளறி கொட்டியுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஒ.பன்னீர்செல்வத்தின் நம்பிக்கையுள்ள பி.ஏ. ரமேஷ் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடப்பதாக தெரியவந்துள்ளதாக அதிமுக வட்டாரமே கடும் அதிர்ச்சிக்கு உள்ளளாகியுள்ளது.
அண்ணாநகர் ஐயப்பன் கோயில் அருகே 6வது தெருவில் நடந்துள்ள இந்த ரெய்டின் போது, ராம்மோகன் ராவ் வீட்டின் அருகே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிகப் பெரிய பொறுப்பில் உள்ள தலைமை செயலாளர் விட்டிலேயே ரெய்டு நடப்பதால், சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அல்லது பண பரிவர்த்தனையில் ஈடுபட்ட அமைச்சர்கள் சிலர் நிச்சயம் சிக்குவார்கள் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.