பலத்த எதிர்பார்ப்புக்கிடையே தலைமை செயலகம் வந்தார் ஓபிஎஸ் - பொதுமக்கள் மலர் தூவி வாழ்த்து

 
Published : Feb 13, 2017, 01:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
பலத்த எதிர்பார்ப்புக்கிடையே தலைமை செயலகம் வந்தார் ஓபிஎஸ் - பொதுமக்கள் மலர் தூவி வாழ்த்து

சுருக்கம்

7 நாட்களுக்கு பிறகு பதற்றமான சூழ்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே தலைமை செயலகம் வந்தார்.பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

முதல்வராக இருந்த ஓபிஎஸ் கடந்த 5ஆம் தேதி கடலில் மிதந்த எண்ணெய் படலத்தை அகற்றும் வேலையை பார்வையிட்ட பின் தலைமை செயலகம் வந்தார்.அதன் பின் அன்று மதியமே சசிகலா சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு ஓபிஎஸ் ராஜினமாவும் செய்யவைக்க பட்டார்.

சசிகலா முதல்வராவதற்கு பொதுமக்கள் கட்சிகாரர்கள் இடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இரண்டு நாள் கழித்து ஓபிஎஸ் சசிகலாவை விமர்சித்து எதிர்நிலை எடுத்தார்.

இதையடுத்து ஓபிஎஸ் சசிகலா என இரு அணிகளாக அதிமுக பிளவுபட்டது.

கடந்த 7ஆம் தேதி இரவு ஜெ. சமாதியில் பேட்டியளித்து விட்டு பலத்த வரவேற்புக்கிடையே வீடு திரும்பிய ஓபிஎஸ் கடந்த 7 நாட்களாக அமைச்சர் இல்லத்திலேயே செய்தியாளர்களை அவரை சந்தித்து ஆதரவாளர்கள் அவர் அணியில் நிகழ்ச்சியும் நிகழ்ந்து வந்தது.

இந்நிலையில் அரசு பணிகள் ஸ்தம்பிதுள்ளதாக கூறப்படுகிறது என்று நேற்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது,

அரசு பணிகள் நடந்து வருகிறது, தலைமை செயலாளர் துணை செயலாளர்களுடன் பேசி வருகிறேன் என்று பதிலளித்த ஓபிஎஸ் நாளை தலைமை செயலகம் செல்வேன் என்று தெரிவித்தார்.

தலைமை செயலகம் செல்லும் ஓபிஎஸ் காரை அதிமுவினர் வழிமறிக்க உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று காலை கமிஷனருடன் டிஜிபி ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் செல்லும் வழியில் குறுக்கீடுகள் எதுவும் இருக்ககூடாது.சட்ட ஒழுங்கு பிரச்சனைகை வந்து விடகூடாது என்பதில் போலீஸ் கவனமாக இருந்தனர்.

சசிகலாவுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து தனி அணி அமைத்த ஓபிஎஸ் முதன்முறையாக தலைமை செயலகம் செல்வதால் அவருக்கு வரவேற்பு அளிக்க பொதுமக்கள் தொண்டர்கள் முடிவெடுத்தனர்.திட்டமிட்டபடி 12 மணிக்கு கிரீன்வேஸ் இல்லத்திலிருந்து ஓபிஎஸ் புறப்பட்டார்.

வழியில் அவருக்கு பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர்.

ஜெயலலிதா வரும்போது தூவுவது போல் ரோஜா மலர்களை அவர் கார் மீது தூவினர்.

வழி நெடுக தொண்டர்கள் உற்சாகத்துடன் அவரை கை கூப்பி வழியனுப்பி வைத்தனர்.

அவர்களின் வாழ்த்துக்களை ஏற்று கொண்டு சிரித்தபடி முதல்வரின் கார் தலைமை செயலகத்தை வந்தடைந்தது.

வழி நெடுக போலீஸ் பாதுகாப்பு, கடுமையாக இருந்ததால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

தலைமை செயலகத்துக்கு அவருடன் அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களும் வந்தனர்.

தலைமை செயலகத்திலிருந்து எண்ணூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மீனவ குடியிருப்பை முதல்வர் ஆய்வு செய்ய செல்வார் என்ற தகவலும் எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு