
அமைச்சர் குடியிருப்பை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டதால் 6ஆண்டுகளுக்கு மேலாக தான் வளர்த்து வந்த பசு மாடுகளை தெரிந்தவர்கள் எடுத்து செல்லும்படி ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.
அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முழுவதுமாக சென்னை வாசியாக மாறிவிட்ட ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள அமைச்சர் இல்லத்தில், வசித்து வந்தார்.
மிகப்பெரிய தோட்டத்துடன கூடிய அமைச்சர் இல்லத்தில் சொந்தமாக 6 க்கும் மேற்பட்ட கறவை மாடுகளையும் ஒரு காளையையும் வளர்த்து வருகிறார்.
பல்வேறு பணிகள் இருந்தாலும் பசுமாடுகளையும் காளையையும் பராமரிக்க அவர் தயங்கியதே இல்லை. தனது வீட்டின் பின்புறம் பெரிய கொட்டகை அமைத்து பசுமாடுகளையும் காளையையும் பராமரித்து வந்தார்.
நான் காளைகலுடனே வளர்ந்து வந்தவன், காளையையும் வளர்த்து வருகிறேன், ஜல்லிக்கட்டின் மீது அக்கறை இல்லவன் அல்ல நான், என்று கூறி தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை காண்பித்த ருசீகர சம்பவமும் அன்று நடந்தது.
ஆசையாக வளர்த்த காளை மாட்டை மட்டும் சொந்த ஊருக்கு அனுப்ப உள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.