இறுதிவரை திக்.. திக்.. நிமிடங்கள்.. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்..!

Published : Oct 12, 2021, 05:51 PM ISTUpdated : Oct 12, 2021, 05:53 PM IST
இறுதிவரை திக்.. திக்.. நிமிடங்கள்.. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்..!

சுருக்கம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமருதூர் ஊராட்சியில் டி. ரமேஷ்குமார் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்தார். நெஞ்சுவலியால் அண்மையில் ரமேஷ்குமார் உயிரிழந்தார். இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,150 வாக்காளர்களை கொண்ட ஊராட்சியில் 3 பேர் போட்டியிட்டனர். 

திருச்சி சிறுமருதூர் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கடல்மணி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமருதூர் ஊராட்சியில் டி. ரமேஷ்குமார் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்தார். நெஞ்சுவலியால் அண்மையில் ரமேஷ்குமார் உயிரிழந்தார். இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,150 வாக்காளர்களை கொண்ட ஊராட்சியில் 3 பேர் போட்டியிட்டனர். 

இதில், மறைந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மனைவி கன்னியம்மாள் 423 வாக்குகளும், கடல்மணி என்ற கதிரவன் 424 வாக்குகளும், சத்தியநாதன் 137 வாக்குகளும், 5 வாக்குகள் செல்லாத வாக்குகள் என மொத்தம் 989 வாக்குகள் பதிவானது. இந்நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் கடல்மணி என்ற கதிரவன் வெற்றி பெற்றார். இதனையடுத்து, கடல்மணி வெற்றி பெற்ற சான்றிதழை தேர்தல் அலுவலர் வழங்கினார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!