சீன ராணுவத்துடன் மோதி உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் மனைவிக்கு வீட்டு மனை.. அண்ணாமலை தலைமையில் வழங்கப்பட்டது.

By Ezhilarasan BabuFirst Published Oct 12, 2021, 4:54 PM IST
Highlights

இந்நிலையில் அவரது தியாகத்தை போற்றும் வகையில் அவரது குடும்பத்திற்கு சென்னையை சேர்ந்த ராணுவ வீரர் 2400 சதுர அடி கொண்ட வீட்டுமனை பட்டா வழங்கினார், அதற்கான நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

சீனாவுக்கு எதிராக கால்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு சென்னையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தன் வீட்டு மனையை பரிசாக வழங்கியுள்ளார். 
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அது வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20க்கும் மேற்பட்ட  ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.  இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் அது உறுதியாகவில்லை, இந்த மோதலில்  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரர்  வீரமரணம் அடைந்தார்.இந்நிலையில் அவரது தியாகத்தை போற்றும் வகையில் அவரது குடும்பத்திற்கு சென்னையை சேர்ந்த ராணுவ வீரர் 2400 சதுர அடி கொண்ட வீட்டுமனை பட்டா வழங்கினார், 

இதையும் படியுங்கள்: உள்ளாட்சி அமைப்புகளில் சாதி வெறி.. தீக்குளித்து இறந்த வெற்றிமாறனுக்கு நீதி எங்கே.. கொந்தளிக்கும் சீமான்.

அதற்கான நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு இறந்த ராணுவ வீரரின் மனைவிக்கு வீட்டு மனை பட்டா மற்றும் அதற்கான சொத்து ஆவணங்களை வழங்கினார். அந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, ஜூன் 15- 2020 கால்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய திடீர் தாக்குதலில், நம் வீரர் பழனி உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் குடும்பத்திற்கு முன்னாள் ராணுவ வீரர் கணபதி இன்று அவருக்கு சொந்தமாக வீட்டுமனை ஒன்றை வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சி எனது தலைமையில் நடைபெறுகிறது, இது ஒரு  உணர்ச்சிமிக்க நிகழ்ச்சி, பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் வேலை கொடுக்கப்பட்டு ராணுவ வீரர் பழனியின் மனைவி அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளார். 

இதையும் படியுங்கள்: வாகன ஓட்டிகளே உஷார்... நாளை முதல் ஹெல்மெட் அணியாதவர்களின் இருசக்கர வாகனம் பறிமுதல்.. களத்தில் போலீஸ்.

பழனியில் வீரத்தைப் போற்றி அவருக்கு மத்திய அரசின் வீர் சக்ரா விருது கொடுத்துள்ளது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சீதக்காதி விளையாட்டு அரங்கில் பழனிக்கு திருவுருவச் சிலை வைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். பழனிக்கு சிலை வைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என கூறினார். அவரைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதி, என் கணவரைப் போலவே என் மகனுக்கும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, எனவே அவனையும் நிச்சயம் ராணுவத்திற்கு அனுப்புவேன் என்றார். இந்திய ராணுவத்திற்கு  தங்கள் குடும்பத்தில் இருந்து தமிழக மக்கள் நிறைய வீரர்களை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

click me!