
நீரா என்ற பெயரில் பனை, கள்ளு இறக்க தமிழக விவசாயிகளுக்கு எடப்பாடி தலைமையிலான அரசு அனுமதி வழங்கியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மொட்டை போட்டு நன்றி தெரிவித்துள்ளனர் மது குடிப்போர் சங்கத்தினர்.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி ஆட்சி தொடர வேண்டும் எனவும் வடபழனி கோவிலில் வேண்டுதல் வைத்து மொட்டை போட்டுள்ளனர்.
இதுகுறித்து மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
தமிழக விவசாயிகளையும், தமிழக மண்வளத்தையும் காத்திடும் வகையில் சிறு கனிம வளத்துறையின் மூலம், விவசாயிகள் ஆறு, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து விவசாய நிலத்தை வளமாக்கிட ஆணையிட்டதற்காகவும், 'நீரா' என்ற பெயரில் பனை, கள்ளு, இறக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியதற்காகவும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
40 ஆண்டுகளாக கருணாநிதி, ஜெயலலிதா ஏரி குளங்களில் மண் எடுக்க தடை போட்டதால் கெமிக்கல் உரங்கள் போட்டு மண்ணை உரமேற்றியதால் இயற்கை விவசாயம் அழிந்து போனது.
இத்தகைய நிலையை போக்கிட விவசாயிகளுக்கு தேவையான உரமிக்க ஏரி குளத்து மண்ணை அள்ளி செல்ல எடப்பாடி ஆணையிட்டுள்ளார்.
அதற்காகத்தான் இவருடை நல்ல திட்டங்கள் மேலும் வளர வடபழனி முருகனிடம் வேண்டி முடி காணிக்கை செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.