"பதவிக்காக தான் இந்த இணைப்பு" - வறுத்தெடுக்கும் பழனியப்பன்..!!

First Published Aug 19, 2017, 2:08 PM IST
Highlights
palaniyappan mla about admk joining


சுயநல நோக்கத்துடன் எடப்பாடி அணியுடன் பன்னீர்செல்வம் இணைப்பு வைக்கிறார் எனவும், பதவிக்காகவே இந்த இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும், டிடிவி ஆதரவாளரான எம்.எல்.ஏ பழனியப்பன் தெரிவித்துள்ளார். 

அதிமுக இணைப்பு குறித்து பரபரப்பாக பேசபட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நாள் முதலே ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என ஒபிஎஸ் முழக்கமிட்டு வருகிறார். 

அதனால் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திடீரென ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் ஜெ வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார். 

இதையடுத்து அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்னையில் நேற்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன்  ஆலோசனை நடத்தினார். இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

இதையடுத்து ஜெ சமாதியில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. காரணம் பிரிந்த இடத்திலேயே ஒன்று சேர உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் இணைப்பு நடைபெறவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்த ஒபிஎஸ் இணைப்பு ஓரிரு நாளில் நடைபெறும் என தெரிவித்தார். 

இதைதொடர்ந்து டிடிவி தினகரனுடன் 10 எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ பழனியப்பன், பொதுச்செயலாளர் சசிகலாவின் பேரில் ஆலோசனை நடத்தினோம் எனவும் இரு அணிகள் இணைப்பு என்பது நகைச்சுவையாக உள்ளது எனவும் தெரிவித்தார். 

மேலும் சுயநல நோக்கத்துடன் எடப்பாடி அணியுடன் பன்னீர்செல்வம் இணைப்பு வைக்கிறார் எனவும், பதவிக்காகவே இந்த இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும், குறிப்பிட்டார். 

சசிகலாவை தொண்டர்கள் ஏற்றுக்கொண்டது மேலூர் பொதுக்கூட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது எனவும், பழனியப்பன் தெரிவித்தார். 

click me!