பட்ஜெட்டின் உள்ளடக்கங்களை அறியும் பக்குவம் பழனிசாமிக்கு இல்லை... ஈபிஎஸ் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!!

By Narendran S  |  First Published Mar 20, 2023, 11:59 PM IST

திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தி பெருகியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தி பெருகியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட்டின் உள்ளடக்கங்களை அறியும் பக்குவம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. மகளிர் வாழ்வில் மாபெரும் புரட்சியை மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏற்படுத்தும். திமுக ஆட்சியில் தொழில் வளார்ச்சி, வேளாண் உற்பத்தி பெருகியுள்ளது. எல்லார்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கிய நமது பயணம் தொடரும், வெல்லும். திராவிட மாடல் என்ற கருத்தியலுக்கு முழுமையான எடுத்துக்காட்டாக நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அறநிலையத்துறை பள்ளிகளில் இந்து சமய கல்வி கட்டாயம்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

Latest Videos

திட்டங்களை உரிய காலத்தில் முடித்து மக்களுக்கு வழங்க அமைச்சர்கள், அதிகாரிகள் அயராது பாடுபட வேண்டும். அனைத்து மக்களுக்கும் உதவி செய்யப்போகும் பல்வேறு நலத்திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டை தலை நிமிர வைக்கும் நிதிநிலை அறிக்கை. இருண்ட காலத்தை தமிழ்நாட்டுக்கு வழங்கிய பழனிசாமியால் உதயசூரியன் ஒளியை பார்க்க முடியாமல் தவிர்ப்பதையே அவரது பேட்டி உணர்த்துகிறது. நிதிநிலை அறிக்கை சீராக இருந்திருக்குமானால் இன்னும் பல திட்டங்களை தீட்டியிருக்க முடியும். அதிமுக ஆட்சியில் இருந்த இருண்ட கால நிதிநிலையை சீர்செய்தும் முன்னேற்றியும் முற்போக்கான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றுவதே திமுகவின் திட்டம்... அண்ணாமலை விமர்சனம்!!

தமிழ்நாட்டை நோக்கி ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நிதிநிலையை உருவாக்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நன்றி. திமுக ஆட்சிக்கு வரும்போது ரூ.62 ஆயிரம் கோடியாக இருந்த வருவாயை பற்றாக்குறை தற்போது ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம். திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தி பெருகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

click me!