பழனிச்சாமி சிரித்த முகத்தோடு சிறப்பான ஆட்சியை தருகிறார்... ஓவராக கூவும் அமைச்சர்..!

Published : Feb 16, 2020, 04:46 PM ISTUpdated : Feb 16, 2020, 04:50 PM IST
பழனிச்சாமி சிரித்த முகத்தோடு சிறப்பான ஆட்சியை தருகிறார்... ஓவராக கூவும் அமைச்சர்..!

சுருக்கம்

3 நிமிடங்கள் இந்த ஆட்சி நீடிக்குமா என்று கேட்டவர்களுக்கு, தனது சிறப்பான செயல்பாடுகளால் 3 ஆண்டுகளை நிறைவு செய்து முதலைமச்சர் பழனிச்சாமி சாதனை படைத்துள்ளதாக கூறியுள்ளார். முதல்வர் பழனிச்சாமி சிரித்த முகத்தோடு சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார். 

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சிறப்பான செயல்பாடுகளை கண்டு பாராட்டியிருப்பார் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர்கள் சங்கம் சார்பில் மதுரை அமெரிக்கன் கல்லூயில் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;- 3 நிமிடங்கள் இந்த ஆட்சி நீடிக்குமா என்று கேட்டவர்களுக்கு, தனது சிறப்பான செயல்பாடுகளால் 3 ஆண்டுகளை நிறைவு செய்து முதலைமச்சர் பழனிச்சாமி சாதனை படைத்துள்ளதாக கூறியுள்ளார். முதல்வர் பழனிச்சாமி சிரித்த முகத்தோடு சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார். 

பல தலைமுறைகளாக மக்கள் மீது கடன் சுமை இருக்கத்தான் செய்கிறது. கடனை திருப்பிச்செலுத்துங்கள் என மக்களிடம் எந்த அரசும் சொல்வது கிடையாது. அரசு தான் கடனை செலுத்துகிறது. ஒவ்வொருவரின் தலையில் கடன் சுமத்தப்படுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றார். 

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்து பதிலளித்த அமைச்சர், சிஏஏ பற்றி தெரியாதவர்கள்தான் அதற்கு எதிராக போராடுகிறார்கள். சி.ஏ.ஏ. பற்றி தெரிந்தவர்கள் அமைதியாக இருக்கின்றனர் என்று தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!