குடியுரிமை கறுப்பு சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று..!! சட்டமன்றத்தை முற்றுகையிட துணிந்த மாஜக..!!

By Ezhilarasan BabuFirst Published Feb 16, 2020, 4:14 PM IST
Highlights

மத்திய அரசின் குடியுரிதை திருத்தச் சட்டம்,  தேசிய குடிமக்கள் பதிவேடு,  தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு , ஆகிய  குடியுரிமை தொடர்பான கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மக்கள் இந்தியா முழுதும் ஜனநாயக வழியில் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள்

மத்திய அரசின் குடியுரிதை திருத்தச் சட்டம்,  தேசிய குடிமக்கள் பதிவேடு,  தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு , ஆகிய  குடியுரிமை தொடர்பான கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மக்கள் இந்தியா முழுதும் ஜனநாயக வழியில் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். பல மாநில அரசுகள்  இதற்கு எதிராக சட்டமன்றங்களை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன. தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ள நிலையில், நடைபெறும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும்  அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என திமுக, காங்கிரஸ், மஜக, ஐயூஎம்எல்,  உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. 

அத்தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக மக்களும் விரும்புகிறார்கள். எனவே தமிழக அரசிடம் இக்கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, கூட்டமைப்பு சார்பில் கூடிய கூட்டத்தில் , ஜமாத்துல் உலமா தலைவர் மவ்லவி காஜா மொய்தீன் ஹஜ்ரத் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எதிர்வரும் பிப்ரவரி 19 அன்று தமிழக சட்டமன்றத்தை அமைதி வழியில் முற்றுகையிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அது போல் சென்னை, காஞ்சி, திருவள்ளுர் மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் அன்றைய தினம் கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்ட நிகழ்வுகளில் அனைத்து சமூக மக்களும்  அலை, அலையாய் பங்கேற்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம். இது ஜனநாயகம், சமூகநீதி, அரசியல் சாசன மரபுகள் ஆகியவற்றை காப்பதற்கான அறவழி போராட்டம் என்பதை அனைவருக்கும்  நினைவூட்டுகிறோம். என மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.  

click me!