சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திமுகவினர் முயற்சி செய்கின்றனர். மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்கிற கனவு நிறைவேறவில்லை என்கிற விரக்தியில் திமுகவினர் இவ்வாறு செய்து வருகின்றனர். திமுக ஓட்டுக்காக போலி வாக்காளர்களை உருவாக்கி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். திமுக நாட்டு நன்மையை விட ஓட்டு நன்மையை முக்கியமாக நினைக்கிறது என்றார்.
பாகிஸ்தானில் இருப்பதை விட சுதந்திரமாக இஸ்லாமியர்கள் இந்தியாவில் இங்கிருக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான இல.கணேசன் கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தி.நகரில் அமைந்துள்ள ஓம்சக்தி விநாயகர் ஆலயத்தில் பாஜக மத்திய சென்னை சார்பாக ஏழைகளுக்கு இலவச சேலையும் அன்னதானமும் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இல.கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திமுகவினர் முயற்சி செய்கின்றனர். மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்கிற கனவு நிறைவேறவில்லை என்கிற விரக்தியில் திமுகவினர் இவ்வாறு செய்து வருகின்றனர். திமுக ஓட்டுக்காக போலி வாக்காளர்களை உருவாக்கி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். திமுக நாட்டு நன்மையை விட ஓட்டு நன்மையை முக்கியமாக நினைக்கிறது என்றார்.
தமிழக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குடியுரிமை திருத்தச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த சட்டம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேற்ற வேண்டிய ஒன்று.
undefined
இஸ்லாமிய மதத்தில் உள்ள பெரியவர்கள் அங்குள்ள இளைஞர்களுக்கு புத்திமதி கூற வேண்டும். இஸ்லாமிய சமூகத்தில் பலர் தெளிவான தேச பக்தியுடன் உள்ளனர். சிஏஏ, என்பிஆர் எல்லோருக்கும் பொதுவானது. பாகிஸ்தானில் இருப்பதை விட சுதந்திரமாக இஸ்லாமியர்கள் இந்தியாவில் இங்கிருக்கிறார்கள். ஆனால் ஒரு இந்து அங்கு பதவிக்கு வரமுடியாது. ஆனால் வாஜ்பாய், அப்துல் கலாமை குடியரசு தலைவராக்கினார் என்றும் அவர் பேசினார்.
மேலும், தமிழக பாஜக தலைவர் என்பது தேர்தல், ஒரு ஒருமித்த கருத்தோடு கூட தேர்வு செய்வோம். முறையாக மத்தியில் உள்ள நிர்வாகிகள் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தகவல் தெரிவித்துள்ளார்.